நடிகர் சத்யராஜ் வீட்டில் நடந்துள்ள திடீர் சோகம் – பிரபலங்கள் இரங்கல்!

0
நடிகர் சத்யராஜ் வீட்டில் நடந்துள்ள திடீர் சோகம் - பிரபலங்கள் இரங்கல்!
நடிகர் சத்யராஜ் வீட்டில் நடந்துள்ள திடீர் சோகம் - பிரபலங்கள் இரங்கல்!
நடிகர் சத்யராஜ் வீட்டில் நடந்துள்ள திடீர் சோகம் – பிரபலங்கள் இரங்கல்!

நடிகர் சத்யராஜ் அவர்களின் சகோதரி கல்பனா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். இதனை அறிந்த திரை பிரபலங்கள் மற்றும் பிரமுகர்கள் அனைவரும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இரங்கல் செய்தி:

நடிகர் சத்யராஜ் அவர்கள் இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் 80 களில் சாதாரண குழு நடிகராக அறிமுகம் ஆகி, அதன்பின்னர் வில்லன் கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்து மக்களின் கவனத்தை பெற்றவர். அதன்பிறகு, கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு, தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் இந்திய சினிமாவில் தனிப்பெரும் இடத்தை பிடித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் மீண்டும் சம்பள உயர்வு – அரசு ஆலோசனை!

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் அவர்களின் சகோதரி கல்பனா மன்றாடியார் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கல்பனா அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்து உடல்நலமில்லாமல் இருந்தார் என்றும், இதனால் அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. கல்பனா அவர்களுக்கு தற்போது 66 வயது.

வாரத்தில் 3 நாட்கள் வகுப்புகள், 3 நாட்கள் விடுமுறை – CBSE வாரியம் முக்கிய முடிவு!

இன்று இவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சத்யராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சத்யராஜ் அவர்கள் திரை பயணத்தின் ஆரம்ப காலத்தில் வந்த பொழுதில் இருந்து தற்போது வரை அவரது சகோதரி மிகவும் ஆதரவாக இருந்துள்ளார். மேலும், சத்யராஜும் தனது சகோதரியிடம் மிகுந்த பாசத்தோடு இருந்து வந்துள்ளார். எந்த ஒரு முடிவையும் சகோதரியிடம் ஆலோசித்து தான் சத்யராஜ் எடுத்து வந்துள்ளார். இதனால் சகோதரியின் பிரிவை தங்கிக்கொள்வதற்காக பலரும் சத்யராஜ் அவர்களுக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here