சென்னை: திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

0
சென்னை: திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!
சென்னை: திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!
சென்னை: திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்க விலை:

கடந்த ஜூலை மாதம் முதல் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது, அதனை தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்து வருகிறது. மேலும் தங்கம் விலை ராக்கெட் விலையில் அதிகரித்து இருந்தாலும் கடந்த வாரம் தங்கம் விலையானது குறைந்தது. அதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில், இந்த மாதம் தொடக்கத்தில் தங்கம் விலையானது சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.38,360க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனால் மக்கள் பலர் தங்கம் வாங்க குவிந்தனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.38,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.4,830 விற்பனை செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

தமிழக வாகன ஓட்டிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – கூடுதலாக பார்க்கிங் வசதி!

மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து, ரூ.61.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் மக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் இந்த நேரத்தில் முதலீடு செய்யலாமா என சிந்தித்து பின் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கம் விலை எவ்வளவு இருந்தாலும் மக்களுக்கு தங்கம் மீது மோகம் குறையாமல் இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!