பழனி பஞ்சாமிருதத்தின் விலை திடீர் உயர்வு – பக்தர்கள் வாக்குவாதம்!
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிருதத்தின் விலையை பழனி முருகன் கோவில் நிர்வாகம் திடீரென உயர்த்தியதால் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி பஞ்சாமிருதம்:
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு, நாளும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்தும் முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முருகன் கோவில் நிர்வாகத்தால் விற்பனை செய்யப்படும் பிரசித்தி பெற்ற பஞ்சாமிருதினை வாங்கி செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பழனி பஞ்சாமிருதத்திற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது.
அந்தமானுக்கு டிக்கெட் போட சொல்லும் முத்து.. சந்தோஷத்தில் மீனா.. ஷாக்கான விஜயா!
இதனிடையே, ‘பெட் ஜார்’ல் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிருதம் ரூ. 35க்கும், சீல்டு டின்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிருதம் ரூ.40க்கும் கிடைத்தது. இந்நிலையில், திடீரென விலையேற்றம் செய்யப்பட்டு பெட் ஜார் பஞ்சாமிருதம் ரூ.40க்கும், சீல்டு டின்களில் விற்கப்படும் பஞ்சாமிருதம் ரூ.45க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென பஞ்சாமிருதத்தின் விலையை கோவில் நிர்வாகம் உயர்த்தியுள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.