சென்னையில் திடீரென உயர்ந்த பார்க்கிங் கட்டணம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

0
சென்னையில் திடீரென உயர்ந்த பார்க்கிங் கட்டணம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சென்னையில் திடீரென உயர்ந்த பார்க்கிங் கட்டணம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சென்னையில் திடீரென உயர்ந்த பார்க்கிங் கட்டணம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சென்னையில் உள்ள தியாகராஜ நகரில் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருவதால் தியாகராஜ நகரில் சில முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளதாகவும், பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பார்க்கிங் கட்டணம்:

தமிழகத்தில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினால் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென்று சென்னை தியாகராஜர் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை சென்னை மாநகராட்சி ஒரேநாளில் உயர்த்தியுள்ளது. அதாவது தற்போதைக்கு சென்னை தியாகராஜர் சாலையில் நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நான்கு சக்கர வாகனத்தை தி நகரில் நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணமாக ரூபாய் 60 செலுத்த வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

ஒரே நாளில் இருபது ரூபாய் உயர்த்தியுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், தியாகராஜ நகரில் ஒரு மணி நேரத்திற்கு இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணமாக இதுவரைக்கும் ரூபாய் 10 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 5 ரூபாய் அதிகரித்து இருசக்கர வாகனத்தை பார்க்கிங் செய்ய வேண்டும் என்றால் பதினைந்து ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு குறித்து இன்று நடைபெற இருக்கும் மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் உள்ளே!

அதாவது, சென்னையிலுள்ள தியாகராஜ நகரில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காரணத்தினால் வாகனம் நிறுத்தம் பிரீமியம் பார்க்கிங் மண்டலமாக மாற்ற உள்ளதாகவும், தியாகராஜர் சாலையின் ஒரு புறத்தில் மட்டுமே வாகனங்களை பார்க்கிங் செய்யப்படும் வசதி வழங்கப்பட உள்ளதாகவும், மறுபுறம் NO PARKING ஆக மாற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரேநாளில் பார்க்கிங் கட்டணத்தை சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழகம் உயர்த்தியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here