சிகரெட் பாக்கெட்டுகளில் திடீர் மாற்றம் – டிசம்பர் 1 முதல் புதிய சுகாதார எச்சரிக்கை படம்!

0
சிகரெட் பாக்கெட்டுகளில் திடீர் மாற்றம் - டிசம்பர் 1 முதல் புதிய சுகாதார எச்சரிக்கை படம்!
சிகரெட் பாக்கெட்டுகளில் திடீர் மாற்றம் - டிசம்பர் 1 முதல் புதிய சுகாதார எச்சரிக்கை படம்!
சிகரெட் பாக்கெட்டுகளில் திடீர் மாற்றம் – டிசம்பர் 1 முதல் புதிய சுகாதார எச்சரிக்கை படம்!

சிகரெட் பாக்கெட்டுகளில் தற்போது சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன இந்த வகையில் .நாட்டில் வரும் டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக்கேஜ் செய்யப்படும் புகையிலை பொருட்களில் புதிய எச்சரிக்கை வாசகங்கள் உள்ள சுகாதார எச்சரிக்கையுடன் கூடிய படம் பிரசுரிக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

புதிய சுகாதார எச்சரிக்கை படம்:

சிகரெட் பிடிப்பது கேடு என்றும் சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த விளம்பரத்தை பார்த்த பிறகும் சிகரெட் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது மட்டுமின்றி அதிகரித்து தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிகரெட் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும், திரைப்படங்களில் கூட பெரிய நடிகர்கள் சிகரெட் பிடிக்காமல் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

உக்ரைனில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு எழுத அனுமதி!

இந்த நிலையில் அடுத்த கட்டமாக புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்டுகளில் இரண்டு பக்கமும் புதிய எச்சரிக்கை விளம்பரங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது “புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது’ என்ற சுகாதார எச்சரிக்கையுடன் கூடிய புதிய படம் பிரசுரிக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய படம் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி ஓர் ஆண்டு காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

பின்னர், 2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட புகையிலை பொருட்களில் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய சுகாதார எச்சரிக்கைகளின்படி, ‘புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்’ என்று கூடிய சுகாதார எச்சரிக்கை புகைப்படம் இடம்பெறும். அதன்படி, ஜூலை 21, 2022 தேதியிட்ட 2008 ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகளில் திருத்தம் மூலம் புதிய சுகாதார எச்சரிக்கைகளை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) மூன்றாவது திருத்த விதிகள், 2022 இன் கீழ் திருத்தப்பட்ட விதிகள் டிசம்பர் 1, 2022 முதல் பொருந்தும். இதையடுத்து வழிகாட்டுதல்களை மீறுவது சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் (விளம்பரம் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றின் தடை) சட்டம், 2003 ன் பிரிவு 20 ன் படி சிறைத்தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!