கொரோனாவை தடுக்க பிப்.1 வரை புதிய கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு திடீர் அறிவிப்பு!

0
கொரோனாவை தடுக்க பிப்.1 வரை புதிய கட்டுப்பாடுகள் அமல் - மாநில அரசு திடீர் அறிவிப்பு!
கொரோனாவை தடுக்க பிப்.1 வரை புதிய கட்டுப்பாடுகள் அமல் - மாநில அரசு திடீர் அறிவிப்பு!
கொரோனாவை தடுக்க பிப்.1 வரை புதிய கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு திடீர் அறிவிப்பு!

கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த ஒடிசாவின் புதிய வழிகாட்டுதல்கள் இன்று முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். மேலும், அனைத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து, நகர்ப்புறங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை அரசு விதித்துள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்றின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை பரவல் நேற்றைய நிலவரப்படி 5 பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒடிசாவில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் மொத்த எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சக அறிக்கையின் படி மாநிலத்தில் 1,480 பேர் தற்போது கொரோனா சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதனால் கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த ஒடிசாவின் புதிய வழிகாட்டுதல்கள் இன்று முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. புத்தாண்டு மற்றும் புத்தாண்டு தினங்களில் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு ஒடிசா அரசு நேற்று தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் ஜன.1 முதல் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலையும், கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள மா தாரிணி கோயிலையும், புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோயிலையும் டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை மூட உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. சிறப்பு நிவாரண ஆணையர் பிறப்பித்த உத்தரவில், பிக்னிக் ஸ்பாட்கள், மால்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களில் கூட்டங்களை சோதனை செய்யுமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அனைத்து சமூக மற்றும் மத கூட்டங்களும் தடை செய்யப்படும் மற்றும் பூங்காக்கள், இயற்கை கிளப்புகள், கடற்கரைகளில் சுற்றுலா அனுமதிக்கப்படாது.

ஹோட்டல்களிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ எந்த வித கலாச்சார மற்றும் நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படாது. ஜனவரி 2022 இறுதி வரை எந்தக் கல்வி நிறுவனங்களும் பிக்னிக்குகளை ஏற்பாடு செய்யக்கூடாது. மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது. தகுந்த ஆதாரங்களை சமர்பிப்பதால் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள பஞ்சாயத்துத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கோவிட் நெறிமுறைகளுக்கு உட்பட்டு 100 பேருக்கு மிகாமல் அரசியல் கூட்டங்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – வீடு தேடி வரும் டோக்கன்!

முக கவசம் அணிவது, குறைந்தபட்சம் ஆறு அடி சமூக இடைவெளியை பராமரிப்பது போன்ற கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்துவது உறுதி செய்யப்படும் என்று அரசு கூறியுள்ளது. மேலும், இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும். ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், அனைத்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் பிற மத இடங்கள் டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை மூடப்படும் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!