சமையல் எரிவாயு LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மானியத்தொகை குறித்த விவரம் இதோ!

0
சமையல் எரிவாயு LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - மானியத்தொகை குறித்த விவரம் இதோ!
சமையல் எரிவாயு LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மானியத்தொகை குறித்த விவரம் இதோ!

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு அரசு சார்பாக குறிப்பிட்டத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை எவ்வாறு தெரிந்து வைத்துக் கொள்வது என்பது இப்பதிவில் காண்போம்.

சிலிண்டர் மானியத்தொகை:

இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து உயரும் எரிவாயு சிலிண்டர்களின் விலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒரு சிலிண்டர் 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மாதந்தோறும் நாம் வாங்கும் சிலிண்டர் மானியத்தொகை மத்திய அரசு சார்பில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடமாக மானியத்தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்து வருகிறது.

SBI வங்கியில் வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு ஷாக் – EMI கட்டணம் அதிகரிப்பு! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

அப்போது மத்திய அரசு மானியத் தொகையை நிறுத்தி விட்டதாக வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் மக்களின் நலனை கருத்தில் இந்த தொகையை விரைவில் வரவு வைக்க கோரிக்கைகள் எழுந்தது. மேலும் அரசு வழங்கும் மானியத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதே நிறைய பேருக்கு தெரிவதில்லை. பணம் வரவு வைக்கப்பட்டவுடன் எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. இதுவும் சிலருக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த சிலிண்டர் மானியத்தொகை குறித்து தெரிந்து கொள்ள mylpg இணையதளத்தில் சென்று வாடிக்கையாளர்கள் பார்வையிடலாம்.

Exams Daily Mobile App Download

இதில் அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டர் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து ‘View Cylinder Booking History’ என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். சிலிண்டர் டெலிவரி செய்பவர்களிடம் பிரத்தியேகமாக மொபைல் ஆப் உள்ளது. இதில் டெலிவரி விவரம், பணம் செலுத்துவது போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அதனால் அவர்களிடம் கேட்டால் மானியத்தொகை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here