LPG சிலிண்டருக்கான மானியம் இனி கிடைக்காது? நிதியமைச்சர் விளக்கம்!
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு சிலிண்டருக்கான மானியம் வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இந்நிலையில் சிலிண்டருக்கான மானியம் கிடைக்குமா எனவும், எப்போது மானியம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்தும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிலிண்டருக்கான மானியம்:
நாடு முழுவதும் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் விலை அவ்வப்போது உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை முறையாக திருத்தப்பட்டு சரிபார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டுமே நான்கு முறைக்கும் மேலாக சிலிண்டரின் விலை உயர்ந்துவிட்டது. அதே போல இன்றும் கேஸ் சிலிண்டரின் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டு சென்னையில் 1018.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதாவது ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரைக்கும் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. இந்த கொரோனா காலகட்டத்தில் இருந்து இந்த மானிய விலையில் சிலிண்டர் திட்டத்தை மத்திய அரசு அறவே நிறுத்திவிட்டது. அரசு தரப்பில் இருந்து இதற்குப் பிறகு மானியம் வழங்கப்படாது என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் சிலிண்டருக்கான மானியம் கிடைக்குமா என சிலிண்டர் பயனாளர்கள் அவ்வப்பொழுது வங்கி கணக்கில் சரி பார்த்தபடி இருக்கின்றனர்.
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் – மதிப்பெண் குறித்த அறிவிப்பு!
குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் தற்போது சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் குறைவாக கொண்டவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கும் சிலருக்கு மானியம் கிடைப்பதில்லை. இதுமட்டுமல்லாமல் உஜ்வாலா திட்டத்தின் மூலமாக சிலிண்டர் இணைப்புகளை பெற்றவர்களுக்கும் மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது. மானியம் வழங்குவதை அரசு நிறுத்தியதில் இருந்து பல்லாயிரம் கோடி கணக்கான ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சிலிண்டர் மானியம் தொடர்பாக கேரள நிதியமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, சிலிண்டருக்கான மானியம் வழங்குவதை அரசு முழுமையாக நிறுத்துவதற்காகவே வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானியம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.