அரசு ஊழியர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!! 

0
அரசு ஊழியர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் - முதல்வர் முக்கிய அறிவிப்பு!! 
அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பாக முதல்வர் தற்போது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மின்சாரம்:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவ்வப்போது இந்தியாவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு மின் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என பல தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மானிய விலையில் மின்சாரம் வழங்குவது தொடர்பான அறிவிப்பினை முதல்வர் தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது, அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட மாட்டாது எனவும், ஊழியர்களின் குடியிருப்புகளில் பிரிப்பெய்டு மீட்டர்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அதாவது, மினிஸ்டரி காலனியில் உள்ள குடியிருப்புகள் உட்பட அனைத்து குடியிருப்புகளிலும் ஒவ்வொரு காலாண்டிலும் பிரிப்பெய்டு மீட்டர்களை நிறுவும்படி மின்வாரியத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!