மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வலியுறுத்த கூடாது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

0
மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வலியுறுத்த கூடாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வலியுறுத்த கூடாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வலியுறுத்த கூடாது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

தமிழகத்தில் மாணவர்களை பள்ளிக்கு கட்டாயம் வர பள்ளிகள் நிர்பந்திக்கக்கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

மாணவர் வருகை:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் குறைத்த பின்னர், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளும் முறைகயா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று சென்னை அடையாரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார்.

உயர்நீதிமன்ற நீதிபதியாக 8 பேருக்கு பதவி உயர்வு – மத்திய அரசுக்கு பரிந்துரை!

நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதன்பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பள்ளியில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுவது போல், தற்போது இலவசமாக முகக்கவசம் வழங்கப்படுகிறது. முகக்கவசம் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளிகள் வழங்க அரசு முன்னதாக அறிவித்துள்ளது. இதற்கான நிதி அனைத்து பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் 3 லட்சம் ஆசிரியர்கள் ஊரடங்கு காலத்தில் ஊதியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

முறையாக ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பான பள்ளிக்கல்வி துறையின் அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்துள்ளோம். இது குறித்த முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார். பள்ளி நிர்வாகம் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!