12ம் வகுப்பு பொதுத்தேர்வு 2022 – ஆன்லைன் மூலம் நடத்த மாணவர்கள் கோரிக்கை!அரசின் முடிவு!

0
12ம் வகுப்பு பொதுத்தேர்வு 2022 - ஆன்லைன் மூலம் நடத்த மாணவர்கள் கோரிக்கை!அரசின் முடிவு!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு 2022 – ஆன்லைன் மூலம் நடத்த மாணவர்கள் கோரிக்கை!அரசின் முடிவு!

இந்தியாவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆன்லைன் மூலம் எழுதும் வாய்ப்பும் அளிக்க வேண்டும் என்று கோரி 15 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பொதுத்தேர்வு:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவிய கொரோனா பெருந்தொற்றால் தொடர்ந்து விதிக்கப்படும் ஊரடங்கால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் கல்வி பாதிப்படைய கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் அனைத்து வகுப்புகளும் தினசரி பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தொற்று பாதிப்பு அச்சத்தால் நேரடி முறையில் வகுப்புகளை நடத்த முடியாத சூழல் உருவானது. அதனால் கடந்த வருடம் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது.

தமிழக மருத்துவ மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கால அவகாசம் பிப்.18 வரை நீட்டிப்பு!

அதனால் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து மக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நிலையில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் நடப்பு கல்வியாண்டில் பொது தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. பல மாநிலங்களில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆன்லைம் மூலம் எழுதும் வாய்ப்பும் அளிக்க வேண்டும் என்று கோரி 15 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் புதிய நபரை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அந்த மனுவில் கொரோனா பரவலால் பள்ளிகள் பல மாதங்கள் திறக்கப்படவில்லை. அப்படியாக பள்ளிகள் திறந்த போதும் தொற்று அச்சத்தால் மாணவர்கள் பலர் பள்ளிக்கு வரவில்லை. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை பள்ளிகளுக்கு வந்து எழுத வேண்டும் என அறிவித்திருப்பது, அவர்களுக்கு கூடுதல் தேர்வு அச்சத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஓமிக்ரான் தொற்று உலக நாடுகளில் பரவத் துவங்கி உள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here