அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை துவக்கம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

0
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை துவக்கம் - மாவட்ட ஆட்சியர் தகவல்!
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை துவக்கம் - மாவட்ட ஆட்சியர் தகவல்!
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை துவக்கம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் சென்னை ஐடிஐ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி இருப்பதாக சென்னை மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உறுதியாக தெரிவித்தது. அதன் படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்து தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் மாணவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக உயர்கல்வி பயில கல்வி நிறுவனங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்ட செய்தி குறிப்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், வடசென்னை மற்றும் ஆர்.கே.நகர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பொறியியல் படிப்புகளுக்கும் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

அதற்கான தகுதிகளாக மாணவர்கள் 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பயிற்சிகளில் சேர ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 எனவும், பெண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி உதவித்தொகை மாதந்தோறும் ரூ. 750 வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி ஆகியவை வழங்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் பயிற்சியின்போது இன்டர்ன்ஷிப் டிரையினிங் மற்றும் இன்பிளான்ட் டிரையினிங் மூலம் தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் பயிற்சி முடிந்ததும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியான www.skilltraining.tn.gov.in என்பதில் ஜூலை 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 – 29813781 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது அருகில் இருக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here