தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!

0
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூட்டுறவு சங்க மாநில பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தம்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு உட்பட்ட தங்க நகைகள் அடமானம் வைத்தவர்களின் கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. இதனையடுத்து தற்போது நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. 31.03.2021 அன்று வரை நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். மேலும் 40 கிராமுக்கு உட்பட்ட நகைகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

தினசரி மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

இதன் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் :நகைக்கடன் தள்ளுபடி நகைகளை திருப்பி வழங்கும் முன் அந்த கடனுக்கு உரிய அசல், வட்டியை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ரேஷன் கடை பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களை போல 31 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்.

ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ஹாப்பி நியூஸ்! தவறாமல் படிங்க!

மேலும் பயிர் கடன் வழங்குவதில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். அரசிடமிருந்து தள்ளுபடி தொகை கிடைக்காவிட்டால் டெபாசிட் தாரர்களுக்கு பணம் திருப்பி வழங்க முடியாமல் போய்விடும். அதனால் தள்ளுபடி தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் அனைவரும் கூட்டுறவு சங்கங்களை பூட்டி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!