சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பிரபல சீரியல் நடிகை? வீட்டின் முன்பு தர்ணா!

0
சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பிரபல சீரியல் நடிகை? வீட்டின் முன்பு தர்ணா!
சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பிரபல சீரியல் நடிகை? வீட்டின் முன்பு தர்ணா!
சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பிரபல சீரியல் நடிகை? வீட்டின் முன்பு தர்ணா!

யாரடி நீ மோகினி சீரியல் மூலமாக பிரபலமான ஸ்ரீ நிதி தற்போது சிம்புவை காதலிப்பதாகவும், சிம்புவையும் என்னையும் சேர்த்து வைங்க என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும்படியான பதிவினை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

சிம்புவை காதலிக்கும் ஸ்ரீ நிதி:

கடந்த சில மாதங்களாகவே ஸ்ரீ நிதியை சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் அதிகமாக வறுத்தெடுத்து கொண்டிருக்கின்றனர். அதாவது வலிமை திரைப்படம் பார்த்து விட்டு தியேட்டர் விட்டு வெளியே வந்ததுமே வலிமை திரைப்படம் குறித்து இழிவாக பேசியதால் ரசிகர்கள் ஸ்ரீ நிதியை கண்டபடி திட்டி கொண்டிருந்தனர். இந்த விமர்சனங்களில் இருந்து வெளியே வர முடியாமல் ஸ்ரீ நிதி தவித்து கொண்டிருந்தார். தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் ஸ்ரீ நிதி சிக்கியுள்ளார். அதாவது நடிகர் சிம்புவையும், என்னையும் சேர்த்து வைங்க என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ரெடின் கிங்ஸ்லி முதல் ரவீனா வரை – விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 6 போட்டியாளர்கள் லிஸ்ட்!

நேரடியாக சிம்புவின் வீட்டின் முன்பு சென்று வீட்டின் கதவை திறக்க சொல்லுங்க, என்னை சிம்புவை பார்க்க அனுமதிக்க சொல்லுங்க எனவும், எனக்கு இதுக்கு மேல எனர்ஜி இல்லை சிம்புவை உடனடியாக என்னுடன் சேர்த்து வைத்திடுங்க என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்காக மட்டும் தான் இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்துவீர்களா, எங்களை மாதிரி காதலர்களுக்காக போராட்டம் நடத்தி எங்களை சேர்த்து வைக்க மாட்டீர்களா எனவும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

இத்தனை ஆண்டுகளாக சிங்கிள் ஆக இருப்பதை நினைத்து பெருமிதத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். தற்போது எனக்கானவர் சிம்பு தான் என்பதை புரிந்து கொண்டேன் என வாய்க்கு வந்தபடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவினை வெளியிட்டு வருகிறார். இதுமட்டுமல்லாமல் சிம்புவின் வீட்டிற்கு முன்பு குங்குமத்துடன் காத்திருக்கும் படியான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். உண்மையாகவே ஸ்ரீ நிதி சிம்புவை காதலிக்கிறாரா அல்லது விளையாட்டு தனமாக இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறாரா என ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here