வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்கள் போராட்டம் – ஆளுநரின் எச்சரிக்கை!

0
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்கள் போராட்டம் - ஆளுநரின் எச்சரிக்கை!
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்கள் போராட்டம் - ஆளுநரின் எச்சரிக்கை!
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்கள் போராட்டம் – ஆளுநரின் எச்சரிக்கை!

புதுச்சேரியில் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

போராட்டம்:

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணம் முறை கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் இதனை ஈடுகட்டுவதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஒரு யூனிட்டு ரூ.4.50 உயர்ந்துள்ளது. இதனால் தமிழக மின் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் புதுவையில் அரசின் மின் துறையை தனியார்மயமாக்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள் தட்டுப்பாடா? – மத்திய அரசு விளக்கம்!

இதற்கு அரசு மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த தொடர் வேலை நிறுத்ததால் மின் சார்ந்த பழுது மற்றும் பராமரிப்பு, பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மின்தடையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் துறை ஊழியர்கள் பணிக்கு திரும்புமாறு துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். மேலும் மின் துறை ஊழியா்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறு. பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்ய வேண்டாம் என்றும் மின் ஊழியா்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!