ரேஷன் கார்டில் ஆதார் அப்டேட் செய்வது எப்படி? 5 நிமிடங்கள் போதும்!

0
ரேஷன் கார்டில் ஆதார் அப்டேட் செய்வது அவசியம்- 5 நிமிடங்கள் போதும்!
ரேஷன் கார்டில் ஆதார் அப்டேட் செய்வது அவசியம்- 5 நிமிடங்கள் போதும்!
ரேஷன் கார்டில் ஆதார் அப்டேட் செய்வது எப்படி? 5 நிமிடங்கள் போதும்!

இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ என்னும் திட்டத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அப்டேட்:

இந்தியாவில் முதல் கட்ட நடவடிக்கையாக ஆதார் கார்டு முறை அமல்படுத்தப்பட்டது. அத்தகைய ஆதார் கார்டில் ஒரு 12 இலக்க எண் இருக்கும். அந்த எண்ணை அனைத்து விதமான செயல்பாடுகளிலும் இணைக்குமாறு இந்திய அரசு அறிவித்திருந்ததது. அதாவது வங்கி கணக்கு, இபிஎஃப் கணக்கு, வருமானவரி கணக்கு, பான் கார்டு மற்றும் பல ஆவணக்களுடனும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ‘ஒரே நாடு ஒரே கார்டு ‘ என்னும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கார்டிலும் ஆதார் எண்ணை அப்டேட் செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் அவ்வாறு இணைப்பதன் மூலம் நாடு முழுவதும் ஒருவர் எங்கு வேண்டுமானாலும் இருந்து குறைந்த விலையில் பொருட்களை ரேஷன் கடைகளில் இருந்து வாங்கி கொள்ள முடியும்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வு செய்ய அரசு உத்தரவு!

எனவே தற்போது ரேஷன் கார்டு போலவே ஆதார் கார்டும் முக்கியமான ஒரு ஆவணமாக கருதப்படுகிறது. மேலும் அதுபோல அரசு சார்ந்த அனைத்து வேலைகளும் ஆன்லைன் வழியாகவே செய்து முடித்துக்கொள்ளுமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கென்று பிரத்யேகமான ஆப்-களும் அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அப்டேட் செய்யவில்லை என்றால் அதனால் வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. ரேஷன் கார்டில் ஆதார் அப்டேட் செய்வதற்கு 3 வழிகள் உள்ளன. அவை பின்வருமாறு,

முதல் வழி:
 • https://tnpds.gov.in/ என்ற அரசு இணைய தளத்திற்கு செல்லவும்.
 • அதில் பயனாளர் நுழைவு என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்களது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்து, கேப்ட்சா எழுத்துகளை பதிவு செய்து கிளிக் செய்தால் 7 இலக்க ஓடிபி எண் வரும்.
 • அதனை பதிவு செய்து க்ளிக் செய்தால், அது மற்றொரு பக்கத்தில் தொடங்கும்.
 • அந்தப் புதிய பக்கத்தில் ஆதார் எண்கள் என்பதை கிளிக் செய்தால் ரேஷன் கார்டில் தற்போது உள்ளவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது விபரங்கள் தோன்றும்.
 • பின்னர் ஸ்கேன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கியூஆர் குறியீட்டினை ஸ்கேன் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
இரண்டவது வழி:
 • https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் செல்லவும்.
 • அதில் start now என்பதை க்ளிக் செய்யவும்.
 • உங்களது முகவரி மற்றும் போன் நம்பரை கொடுத்து ரேஷன் கார்டு பெனிஃபிட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
 • அதில் உங்களது ஆதார் எண், இ மெயில் ஐடி போன்ற விவரங்களை கொடுக்கவேண்டும்.
 • பின்னர் உங்கள் மொபைல்- க்கு ஒரு ஓடிபி வரும் அதனை கொடுத்து சப்மிட் கொடுத்தால் ரேஷன் மற்றும் ஆதாரின் இணைப்பு விரைவில் ஆகிவிடும்.
மூன்றாவது வழி:
 • ஒரு வேளை உங்களது ரேஷன் கார்டில் பதிவு செய்த மொபைல் எண் இல்லையெனில், ஆஃப் லைனில் சென்றும் அப்டேட் செய்து கொள்ளலாம்.
 • அவ்வாறு செய்வதற்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட விவரங்கள் கொடுத்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
 • இதனை ஆதார் மையத்தில் சென்று, பயோமெட்ரிக் முறையில் அப்டேட் செய்து கொள்ளலாம்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!