ஆதார் கார்டை லாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு தொலைந்தால் உடனடியாக அதை லாக் செய்ய வேண்டும் இணையதளம் மூலம் ஆதாரை லாக் செய்யும் வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
ஆதார் கார்டு :
இந்தியாவில் தனி நபரின் அடையாளமாக விளங்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். வங்கி கணக்கு தொடங்கவும், பான் கார்டு பெறவும், பள்ளி ,கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை தேவைக்கேற்ப மாற்றி கொள்ள UIDAI அவ்வபோது புதிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் ரூ.3,429 கோடி – தேசிய கட்சிகளின் வருமானம்!
அனைத்திற்கும் பயன்படும் ஆதார் கார்டை பாதுகாப்பது நமது கடமையாகும்.ஒரு வேலை எதிர்பாராமல் ஆதாரை தொலைக்க நேர்ந்தால் லாக் செய்ய வேண்டும். ஆதார் கார்டுடன் பான் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது ஆன்லைன் மூலம் ஆதாரை லாக் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் லாக் செய்யும் முறைகள்:
- முதலில் https://uidai.gov.in/ என்ற இணையத்திற்குள் செல்ல வேண்டும்.
- அதில் தோன்றும் முகப்பு திரையில் உள்ள Lock & Unlock’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- உங்களுடைய UID நம்பர், பெயர், பின்கோடு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பவும்.
- அதன் பிறகு OTP எண்ணை பதிவிட்டு ஆதாரை லாக் செய்யவும்.
- ஒருவேளை யாருக்கும் ஆதார் கிடைத்து விட்டாலும் கூட வலைப்பக்கத்தில் சென்று Unlock பட்டனை கிளிக் செய்து send OTP மற்றும் submit கொடுத்தால் போதும் அன்லாக் ஆகிவிடும்.