PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – பண இழப்பை தடுப்பது எப்படி? EPFO முக்கிய அறிவிப்பு!

0
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - பண இழப்பை தடுப்பது எப்படி? EPFO முக்கிய அறிவிப்பு!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - பண இழப்பை தடுப்பது எப்படி? EPFO முக்கிய அறிவிப்பு!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – பண இழப்பை தடுப்பது எப்படி? EPFO முக்கிய அறிவிப்பு!

EPFO கணக்குதாரர்கள் தங்களின் விவரங்களை சமூக ஊடக தளங்கள் மற்றும் தொலைபேசியில் தெரியாத நபர்களிடம் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்று EPFO அமைப்பு எச்சரித்துள்ளது.

EPFO:

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்த அந்த நிறுவனங்கள் சார்பில் பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகை அவர்கள் வாங்கும் சம்பளத்தை பொறுத்து பிடித்தம் செய்யப்படும். பிஎப் தொகையானது நம் கண்ணுக்கு தெரியாத சேமிப்பாகும். இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். EPFO அமைப்பு அவ்வவ்போது பிஎப் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். சம்பளம் பெறும் நபர் நாமினியை நியமனம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு நீக்கம், உணவகங்கள் இயங்க அனுமதி – அரசு அதிரடி உத்தரவு!

தற்போது PF வட்டி விகிதம் 8.5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் பிஎப் கணக்குதரர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும். இந்த நிலையில் EPFO தனது உறுப்பினர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. EPFO தனது கணக்குதாரர்களின் ஆதார் எண், பான் எண், UAN, வங்கி கணக்கு அல்லது OTP போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு ஒரு போதும் கேட்பதில்லை என EPFO தெரிவித்துள்ளது.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் அறிவிப்பு!

மேலும் EPFO கணக்கு விவரங்கள், ஆதார் எண், போன்ற விவரங்களை பகிரும் போது தங்களின் பணத்தை இழக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. DigiLocker ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை சேமிப்பதற்கும் பகிர்வதற்கும் சரிபார்ப்பதற்கு பாதுகாப்பான கிளவுட் அடிப்படையிலான தளமாகும். இதன் மூலம் EPFO உறுப்பினர்கள் தங்கள் ஆவணங்களை ஆன்லைனில் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டும். DigiLocker இல் கிடைக்கும் சில EPFO சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!