ஆதார் எண்ணை பயன்படுத்தி BHIM மூலம் பணம் அனுப்பலாம் – எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் எண்ணை பயன்படுத்தி BHIM மூலம் பணம் அனுப்பலாம் - எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் எண்ணை பயன்படுத்தி BHIM மூலம் பணம் அனுப்பலாம் - எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் எண்ணை பயன்படுத்தி BHIM மூலம் பணம் அனுப்பலாம் – எளிய வழிமுறைகள் இதோ!

இந்த நவீன உலகத்தில் பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய டிஜிட்டல் வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆதார் எண்ணை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யலாம் என்று UIDAI தகவல் வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை:

உலகம் முழுவதும் தொழிநுட்ப ரீதியாக அதீத வளர்ச்சி அடைந்து வருகிறது. அத்தகைய தொழிநுட்ப வளர்ச்சியை நாம் அன்றாடம் கவனித்து வருகிறோம். அதாவது இந்த நவீன உலகத்தில் பண பரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இதுவரை UPI, G-Pay, Paytm, Phone Pay, BHIM உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் முறைகள் பண பரிவர்த்தனைக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம்.

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – மொபைல் போன் தொலைந்த பின்னும் மெசேஜ்களை எடுப்பது எப்படி?

இதில் BHIM மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்று UIDAI தெரிவித்துள்ளது. UPI, G-Pay, Paytm, Phone Pay உள்ளிட்ட டிஜிட்டல் முறைகளுக்கு UPI Id மற்றும் மொபைல் நம்பர் இருந்தால் மட்டுமே அவருக்கு பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். ஆனால் ஸ்மார்ட் போன் உபயோகிக்காதவர்களுக்கும் இன்னும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வருகின்றனர். அவர்கள் எளிமையாக பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் விதமாக இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆதார் எண் பயன்படுத்தி BHIM மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறைகள்:
  • முதலில் BHIM App ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் நீங்கள் உங்களை ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் நீங்கள் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டியவரின் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும். அவரது விபரம் சரிபார்க்கப்படும்.
  • அதன் பின்னர் விபரங்களை சரிபார்த்து பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
  • இதற்கு பணம் பெறுபவர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் வங்கியின் IFSC நம்பர் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • BHIM பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் பே ஆப்ஷனையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இதன் மூலம் Aadhaar Pay POS பயன்படுத்தும் வணிகர்களுக்கு ஆதார் எண் கைரேகை மூலம் டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
  • ஒருவர் பல வங்கிக் கணக்கிற்கு ஒரே மொபைல் நம்பர் பயன்படுத்தினால் எந்த வங்கிக் கணக்கிலிருந்து பணம் செலுத்த வேண்டுமோ அதனை தேர்வு செய்து அனுப்பலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!