தமிழக அரசின் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
தமிழக அரசின் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே கார்டில் பெயர் நீக்கம் செய்யலாம். அதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் பொது விநியோக திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாகவும், இருப்பியா சான்றாகவும் கருதப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதனால் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக தாலுகா அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்து வந்தனர்.

NEET PG தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!

கொரோனா தொற்று தீவிரமெடுக்கும் மக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகரித்து. அதனால் ஆன்லைன் மூலம் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ரேஷன் கார்டில் குடும்ப நபரின் பெயர் நீக்கம் செய்தல் புதிய உறுப்பினர்களின் பெயர்களை சேர்த்தல் போன்ற வேலைகளையும் ஆன்லைன் மூலமாகவே செய்யலாம். தற்போது ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம் செய்யும் முறைகளை எளிய முறையில் கீழே வழங்கி உள்ளோம்.

ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்யும் வழிமுறைகள்:
 • முதலில் https://www.tnpds.gov.in/  என்ற அதிகார்பூர்வ இணையப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
 • அதில் பயனாளர் நுழைவு என்பதை க்ளிக் செய்து, உங்களின் ரேஷன் கார்டுடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.
 • அடுத்ததாக, கேப்ட்சா (Captcha) எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, `பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்யவும்.
 • பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP SEND செய்ய வேண்டும்உங்களுடைய மொபைலுக்கு OTP எண் வந்தவுடன் அந்த எண்ணை பதிவு செய்யவும்.
 • பெயர் நீக்கம் செய்வதற்கு இடது புறத்தில் `அட்டை பிறழ்வுகள்’ என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் சேவை தேர்வுகளில் ‘குடும்ப உறுப்பினர் நீக்கம் என்பதை கிளிக் செய்யவும்.
 • பெயர் நீக்கம் செய்யும் நபருக்கான காரணத்தை பதிவிட வேண்டும். அதற்கான சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 • இறுதியாக அனைத்தும் SAVE கொடுத்து விட்டால் பிறகு 2, 3 நாட்களுக்குள் பெயர் நீக்கம் ஆகிவிடும்.

  Velaivaippu Seithigal 2022

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here