கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பாஸ்போர்ட்டில் இணைப்பது எப்படி?

0
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - பாஸ்போர்ட்டில் இணைப்பது எப்படி?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - பாஸ்போர்ட்டில் இணைப்பது எப்படி?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பாஸ்போர்ட்டில் இணைப்பது எப்படி?

வெளிநாடுகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்போர்ட்டில் தடுப்பூசி சான்றிதழை இணைப்பது குறித்து இப்பதிவில் காணலாம்.

தடுப்பூசி சான்றிதழ்:

தற்போது வெளிநாடு செல்வது பலரது கனவாக இருந்து வருகிறது. ஆனால் கொரோனா தொற்று உலகம் முழுவதும் தீவிரமாக பரவிய நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. பொதுமுடக்கத்தின் காரணமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது.

Airtel நிறுவனம் வழங்கும் IPL ரீசார்ஜ் ஆஃபர் – முழு விபரங்கள் இதோ!

தற்போது பொதுமக்கள் விமானங்களில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றினை ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்டில் இணைப்பது குறித்த விவரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

பாஸ்போர்ட்டில் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றினை இணைக்க விரும்புபவர்கள் www.cowin.in என்ற இணைய முகவரியில் சென்று ‘support’ என்ற வசதியில் உள்ள Certificate Correction என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து Raise an Issue என்பதை தேர்ந்தெடுத்து Add Passport details என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் கேட்கப்படும் பாஸ்போர்ட் நம்பர், பெயர் போன்ற விவரங்களை பதிவிட்டு submit செய்தால் மொபைல் எண்ணிற்கு உறுதிப்படுத்துதல் மெசேஜ் வரும். அதன் பின்பு கோவின் வெப்சைட்டிலேயே தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அதில் பாஸ்போர்ட் விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!