EPFO பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – PF கணக்குடன் ஆதார் இணைக்கும் வழிமுறைகள்!

0
EPFO பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - PF கணக்குடன் ஆதார் இணைக்கும் வழிமுறைகள்!
EPFO பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - PF கணக்குடன் ஆதார் இணைக்கும் வழிமுறைகள்!
EPFO பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – PF கணக்குடன் ஆதார் இணைக்கும் வழிமுறைகள்!

இபிஎஃப்ஓ பயனர்கள் தங்கள் இருப்பு கணக்குடன் ஆதார் எண்ணை வருகிற ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு இணைப்பது என்பதற்கான வழிமுறைகளை இப்பதில் காணலாம்.

ஆதார் இணைப்பு:

நாட்டு மக்கள் மத்தியில் முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது ஆதார் கார்டு. இதனை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் இபிஎஃப்ஓ பயனர்களும் தங்கள் இருப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. இபிஎஃப்ஓ தனது பயனர்கள் கொரோனா காலத்தில் பயனடையும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து வசதி – நீதிமன்றம் உத்தரவு!

அதன்படி பயனர்கள் தங்கள் இருப்பு கணக்கில் இருந்து மூன்று மாத ஊதியத்தை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இதனை பெற வேண்டும் எனில் தங்கள் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தங்கள் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கணக்கில் தொகை வரவு வைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் எண்ணை தங்கள் கணக்குடன் இணைப்பதற்கான எளிய வழிமுறைகளை கீழே காணலாம்

இபிஎஃப்ஓ கணக்கில் ஆதார் இணைக்கும் எளிய வழிமுறைகள்:
  • முதலில் பயனர்கள் இபிஎஃப்ஓ அதிகாரப்பூர்வ தளமான www.epfindia.gov.in என்ற தளத்திற்குள் நுழைய வேண்டும்.
  • அதில் Employees என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உள்ள UAN Member e-sewa என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் உங்கள் UAN ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து தங்கள் கணக்கிற்குள் நுழையவும்.

TN Job “FB  Group” Join Now

  • பின் Manage Tab இல் உள்ள KYC என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் உள்ள ஆதார் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து Save என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் உங்கள் ஆதார் எண் சரிபார்க்கப்பட்டு உங்கள் இபிஎஃப்ஓ கணக்குடன் ஆதார் எண்ணானது இணைக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!