தமிழக அரசின் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் போட்டோ, பெயர் மாற்றுவது எப்படி?

0
தமிழக அரசின் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் போட்டோ, பெயர் மாற்றுவது எப்படி?
தமிழக அரசின் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் போட்டோ, பெயர் மாற்றுவது எப்படி?
தமிழக அரசின் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் போட்டோ, பெயர் மாற்றுவது எப்படி?

தமிழக அரசின் அறிவிப்பின் படி, ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் மாற்றும் வழிமுறைகள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு மாற்றம்

தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான அரசு குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகையை மாதந்தோறும் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், குறிப்பிட்ட சில ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இத்தகைய சலுகைகளை அரசு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதனால் ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவராக ஆண் இருந்தால், அதை மாற்றும் முயற்சியில் பல குடும்பத்தலைவிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு கல்லூரிகளில் 1,146 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்? கோரிக்கை!

இந்த வகையில் ரேஷன் அட்டைகளில் மாற்றங்களை செய்வதற்கு தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி இந்த இணையதளத்தை பயன்படுத்தி ஒருவர் ரேஷன் அட்டையில் புதிய குடும்ப உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றுதல், பெயர் மற்றும் புகைப்படம் மாற்றம், குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கம் உள்ளிட்ட சேவைகளை பெற்று கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை தற்போது வீடுகளில் இருந்தபடியே எளிதாக செய்து கொள்ளலாம்.

அந்த வகையில், ரேஷன் அட்டையில் குடும்ப தலைவரின் பெயரை மாற்ற, முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்துக்கு செல்லவும். அதில், குடும்பதலைவர் மாற்றம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். பிறகு ரேஷன் அட்டையில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை கொடுத்து, கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்யவும். தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP கொடுக்கப்படும். அதை பதிவு செய்து login செய்யவும். அதில் குடும்ப தலைவர் மாற்றம் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். பிறகு மாற்றம் செய்யப்பட வேண்டிய குடும்ப உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அதை உறுதி செய்யவும்.

TN Job “FB  Group” Join Now

பிறகு அந்த பெயருக்கு நேராக கொடுக்கப்பட்டிருக்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும். அடுத்ததாக நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் நபரது ஆதார் அட்டை, இறப்பு சான்றிதழ், விவகாரத்து சான்றிதழ், வருவாய் ஆய்வாளர் தடையின்மை சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றுடன் 1 MB அளவுள்ள பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்களை சரி பார்த்த பின்னர் உங்களுடைய கோரிக்கைகள் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான தகவல் கிடைக்கும். பிறகு உங்கள் விண்ணப்பங்களை சேவ் செய்து கொள்ள வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here