OBC சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

0
OBC சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
OBC சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
OBC சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

கொரோனா பொது முடக்க காலத்தில் ஆன்லைன் மூலமாக ஓபிசி சான்றிதழை எவ்வாறு பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஓபிசி சான்றிதழ்

இன்றைய காலகட்டத்தில் நமக்கு மிகவும் முக்கியமான ஒரு சான்றிதழாக பார்க்கப்படுவது ஓபிசி சான்றிதழ் தான். இந்த பதிவில் ஓபிசி சான்றிதழை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக எவ்வாறாக பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

மருத்துவ, பொறியியல் மற்றும் பிற கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!

ஆன்லைன் மூலமாக பெறுவதற்கு முன்பாக முக்கிய ஆவணங்களான விண்ணப்பதாரரின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை (இதில் ஏதுனும் ஒன்று) மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

ஓபிசி சான்றிதழை பெறுவதற்கான வழிமுறைகள்
  • முதலில், தமிழக இ சேவை மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையத்தில் உள் நுழையவும்.
  • அதில் உங்களது பயனாளர் நுழைவு என்று இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின், கிளை கொடுக்கப்பட்டிருக்கும் நியூ யூசர் என்று இருக்கும், அதனை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை அளிக்க வேண்டும்.
  • அவற்றை நிரம்பியதும், பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிற்கு ஓடிபி வரும், அதனை பதிவு செய்து உறுதி செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பின்பு, Department Wise என்று ஒரு ஆப்சன் இருக்கும், அதனை கிளிக் செய்த பிறகு Revenue Department என்ற பகுதியில் ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கான ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இவை முடிந்ததும், சரி என்ற ஆப்சனை கிளிக் செய்து விட்டு Can Registration என்ற ஆப்சனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
  • Can Registration செய்யும் போது உங்களது சாதி பிரிவு, தாய் மற்றும் தந்தையின் பெயர் மற்றும் சாதி ஆகியவற்றை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
  • பின், அனைத்தையும் சரி பார்த்து விட்டு கடைசியாக Submit கொடுக்க வேண்டும்.
  • கடைசியாக, உங்களது புகைப்படம், உங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது சாதி சான்றிதழ் (இதில் ஏதுனும் ஒன்று) ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பின், இதற்கு கட்டணமாக 60 ரூபாய் கட்ட வேண்டும். இந்த வழிமுறைகள் முடிந்ததும் அரசு அலுவலத்தில் உங்களது விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு நீங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிற்கு தகவல் வந்து சேரும்.
  • பின், இ சேவை இணையத்தில் சென்று உங்களது சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!