18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணமாக கருதப்படும் பான் கார்டினை 18 வயதுக்கு குறைவானவர்கள் பெறுவது எப்படி என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு:

இந்தியாவில் முக்கியமான ஆவணமாக கருதப்படும் ஒன்று PAN Card. தற்போது ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளின் போது பான் கார்டு அவசியமாகிறது. இந்த பான் காடுகளானது வருமான வரித்துறையினர் விநியோகித்து வருகின்றனர். 10 இலக்க எண் கொண்ட இந்த பான் கார்டானது வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடிகளை குறைக்கவும் பயன்படுகிறது.

நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 14 பேருக்கு ‘தயான் சந்த் கேல் ரத்னா’ விருது – குடியரசுத் தலைவர் வழங்கல்!

நாட்டின் அடையாள ஆவணமாக அங்கீகரிக்கப்பட்டது பான் கார்டு. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பான் அட்டை பெறுவது மிகவும் சுலபம். ஆனால் 18 வயதுக்கு குறைவானவர்கள் பான் கார்டு பெறுவது எப்படி என்பது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு பான் கார்டு பெற பெற்றோர்கள் விண்ணப்பிப்பது கட்டாயமாகும்.

PAN கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
  • பான் கார்டு பெற விரும்புபவர்கள் NSDL இன் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் உள்நுழைய வேண்டும்.
  • மைனர் வயது சான்று மற்றும் பெற்றோரின் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும்.
  • அதன் பின் விண்ணப்ப கட்டணம் ரூ. 107 செலுத்தி படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
  • தற்போது ரசீது எண் வழங்கப்படும். அந்த எண் மூலம் விண்ணப்பத்தை கண்காணித்துக் கொள்ளலாம்.
  • சரிபார்ப்புகள் முடிந்ததும் 15 நாட்களுக்குள் பான் கார்டு வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
  • பெற்றோரின் முகவரி மற்றும் அடையாளச் சான்று
  • குழந்தையின் முகவரி மற்றும் அடையாளச் சான்று
  • குழந்தையின் பாதுகாவலர் என்பதற்கான அடையாளச் சான்றாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!