ஆதார் PVC கார்டு – ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

0
ஆதார் PVC கார்டு - ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
ஆதார் PVC கார்டு - ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
ஆதார் PVC கார்டு – ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

ஆதார் அட்டையின் சமீபத்திய பதிப்பான PVC கார்டுகளை பயனர்கள் உபயோகப்படுத்தும்படிக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவுறுத்துகிறது. இந்த PVC கார்டுகளின் அம்சங்கள், பயன்பாடுகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

PVC கார்டு

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள 12 இலக்க அடையாள அட்டை ஆவணமான ஆதார் கார்டுகள் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஒரு சாதாரண டிக்கெட் முன்பதிவு துவங்கி, கடன் வாங்குவது வரையும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இந்த ஆதார் அட்டைகள் அவசியமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு பாதுகாப்பான ஆதார் சேவைகளை வழங்கும் PVC கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஜன.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த PVC கார்டுகளை பயனர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக UIDAI வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘PVC ஆதார் அட்டை: நல்ல தரமான பிரிண்டிங் மற்றும் லேமினேஷன் மூலம், மழையால் கூட சேதமடைவதைப் பற்றி கவலைப்படாமல் இப்போது எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம். உங்கள் ஆதார் PVC ஐ இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்
https://myaadhaar.uidai.gov.in/genricPVC’ என்று குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் இந்த PVC ஆதார் அட்டைகள் எங்கேயும் எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கு முக்கிய அம்சத்தை பெற்றுள்ளது. இது பாதுகாப்பானதும் கூட. இப்போது PVC ஆதார் அட்டைகளை விர்சுவல் ID மற்றும் என்ரோல்மென்ட் IDயை பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான சில எளிய வழிமுறைகளை கீழே விரிவாக காணலாம். அந்த வகையில்

  • முதலாவதாக UIDAIன் resident.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்
  • முகப்புப் பக்கத்தில், ‘ஆர்டர் ஆதார் கார்டு’ என்ற இணைப்பை கிளிக் செய்யவும்
  • இப்போது, உங்கள் 12 இலக்க ஆதார் எண் (UID) அல்லது 16 இலக்க மெய்நிகர்
  • அடையாள எண் (VID) அல்லது 28 இலக்க பதிவு ஐடியை உள்ளிட வேண்டும்
  • பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்
  • இப்போது, ‘கோரிக்கை OTP’ விருப்பத்தை கிளிக் செய்யவும்
  • OTP ஐ உள்ளிடவும்
  • தொடர்ந்து ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்’ என்ற தேர்வுப்பெட்டியை கிளிக் செய்ய வேண்டும்.
  • OTP சரிபார்ப்பை முடிக்க ‘சமர்ப்பி’ பொத்தானைக் கிளிக் செய்யவும்
  • இப்போது புதிய பக்கம் திறக்கும்.
  • ஆர்டரை வைப்பதற்கு முன் சரிபார்ப்பதற்காக ஆதார் விவரங்களின் முன்னோட்டம் தோன்றும்.
  • இப்போது, நீங்கள் பேமெண்ட் கேட்வேயில் பணம் செலுத்த வேண்டும்.
  • இதில் கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மற்றும் UPI மூலம் பணம் செலுத்தலாம்
  • பணம் செலுத்தியவுடன், எளிதாக பதிவிறக்கம் செய்யக்கூடிய டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய ரசீதைப் பெறுவீர்கள்.
  • தவிர SMS மூலம் சேவை கோரிக்கை எண்ணைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
  • இதன் மூலம் PVC ஆதார் அட்டையின் நிலையைக் கண்காணிக்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!