கல்வி சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
கல்வி சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்வது எப்படி?
கல்வி சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்வது எப்படி?
கல்வி சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்வது எப்படி?

எதிர்காலத்தில் உங்களது அரசு வேலைவாய்ப்பிற்கும், உயர் படிப்பிற்கும் அவசியமான கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டாலோ, பேரிடர் காலத்தில் சேதாரமடைந்தாலோ அதனை மீண்டும் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு வேலைவாய்ப்புகளுக்கும், உயர் கல்வி படிப்பிற்கும் அவசியமாக கல்வி சான்றிதழ் உள்ளது. உங்கள் சான்றிதழ்கள் தொலைந்து விட்டாலோ, பேரிடர் காரணமாக சேதமடைந்து விட்டாலோ நீங்கள் அரசிடம் இருந்து தொலைந்தமைக்கான சான்று வாங்க வேண்டும்.

கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு – உள்நுழைய ‘இது’ கட்டாயம்!

அதனை ஆன்லைன் மூலமாக எவ்வாறு விண்ணப்பித்து பெறலாம் என்பது குறித்து முழு விவரம் இப்பதிவில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சான்று பெற தேவையான ஆவணங்கள், விண்ணப்பதாரரின் புகைப்படம், இருப்பிடச்சான்று, ஆகியவை ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழைய வேண்டும்.
  • Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் செய்து, Certificate for Loss Of Educational Records Due To Disasters என்ற Option ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பின்னர் காண்பிக்கும் தகவல்களை சரியாக படித்து Proceed பட்டணை கிளிக் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து உங்களது CAN எண்ணைக் கொடுக்கவேண்டும். CAN எண் இல்லாதவர்கள் Generate CAN என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கான CAN எண்ணை உருவாக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • CAN எண் பதிவு செய்தபின்னர் வரும் பக்கத்தில் உங்களது விவரங்களை நிரப்பவேண்டும். பின்னர் Submit கொடுக்க வேண்டும்.
  • பின்னர் List of Documents பகுதியில் (Photo, Current Address Proof, Self Declaration by Applicant) Mandatory Options காட்டப்படும். அதில் கொடுக்கப்பட்டுள்ள Image (50 KB) அல்லது PDF (200 KB) அளவை அறிந்து UPLOAD செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து ஆன்லைன் மூலம் சான்றிதழுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • பின்னர் அதிகாரிகளால் உங்களது விண்ணப்பம் சரிபார்த்த பின்பு உங்களது தொலைபேசிக்கு செய்தி வரும்.
  • அதன் பின் இதே லாகின் ஐடி மூலம் உள்நுழையும் போது உங்களுக்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!