TN 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
TN 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
TN 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
TN 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in, tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம். இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நாளை ரிசல்ட்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், 10 ,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் இறுதியில் நிறைவடைந்தது. மேலும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது.

ஜூன் 23ம் தேதி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – அரசு அதிரடி உத்தரவு!

இந்த தேர்வில் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளதை அடுத்து (ஜூன் 20 ) நாளை காலை 9 .30 மணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் நாளை பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக பத்து மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2022 திங்கட்கிழமை அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. அடுத்த நிமிடமே மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மேலும் http://www.tnresults.nic.in/http://www.dge1.tn.nic.in/http://www.dge2.tn.nic.in/https://www.dge.tn.gov.in/ ஆகிய இணைய தளங்கள் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம்.

Exams Daily Mobile App Download

அதேபோன்று, நண்பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!