ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் பெயரை ஆன்லைனில் மாற்றம் செய்வது எப்படி?

0
ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் பெயரை ஆன்லைனில் மாற்றம் செய்வது எப்படி?
ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் பெயரை ஆன்லைனில் மாற்றம் செய்வது எப்படி?
ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் பெயரை ஆன்லைனில் மாற்றம் செய்வது எப்படி?

தமிழக அரசு சார்பில் குடும்பத் தலைவி பெயர் மற்றும் புகைப்படம் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்ற அதிகாரபூர்வமற்ற தகவல்கள் காரணமாக பலர் ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இணையதளம் மூலமாக எவ்வாறு இதற்காக விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ரேஷன் அட்டை:

தமிழகத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்துள்ளது. இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், குடும்பத் தலைவி உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.

ஜூலை 19ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு? கர்நாடகா அரசு ஆலோசனை!

இதனால் பலர் தங்களது ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்து வருகின்றனர். அதன்படி https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் ரேஷன் கார்டில் (Ration Card) உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை ஒப்படைக்க / ரத்து செய்ய, அட்டை தொடர்பான சேவை நிலை அறிய விண்ணப்பிக்கலாம். இந்த பதிவில் ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர் பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து காணலாம்.

ரேஷன் அட்டை குடும்ப தலைவர் பெயர் மாற்றம்:

  • முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்தை திறக்க வேண்டும். அதில் குடும்ப தலைவர் என்ற Option யை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் உங்களது ரேஷன் அட்டையில் வழங்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். பிறகு கேப்ட்சா குறியீடு பதிவு செய்ய வேண்டும்.
  • நீங்கள் பதிவு செய்த எண்ணிற்கு OTP வரும். அதன் பின்னர் உங்களது பக்கம் login ஆகிவிடும்.
  • பின்னர் குடும்பத்தலைவர் மாற்றம் என்ற Option யை கிளிக் செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • உங்கள் குடும்ப உறுப்பினர்களின் யாரை குடும்பத் தலைவராக மாற்ற வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • குடும்ப தலைவராக மாற்றுவோரின் பெயருக்கு நேரே உள்ள பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் குடும்ப தலைவராக மாற்றம் செய்பவரின் ஆதார் அட்டை, இறப்பு சான்றிதழ், விவாகரத்து சான்றிதழ், வருவாய் ஆய்வாளர் தடையின்மை சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றை பதிய வேண்டும்.
  • பின்னர் குடும்ப தலைவரது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 1MB அளவுக்குள் இருக்க வேண்டும். அதனை போட்டோ இருக்கும் பாக்சில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்து சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களது கோரிக்கை பதிவேற்றம் செய்து தகவல் வரும். அதனை நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!