ரேஷன் கார்டின் முகவரியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

4
ரேஷன் கார்டின் முகவரியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ரேஷன் கார்டின் முகவரியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ரேஷன் கார்டின் முகவரியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

பொதுமக்கள் மத்தியில் மிக முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது ரேஷன் கார்டு. இந்நிலையில் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் உள்ள முகவரியை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள் குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காணலாம்.

ரேஷன் கார்டு:

மக்களுக்கு அரசு சார்பில் மளிகை பொருட்கள் உட்பட பல அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் கருதி நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தியது. இதனால் ஒருவரின் ரேஷன் கார்டு மூலம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்க இயலும்.

ஜூலை 1 முதல் வார இறுதி, இரவு முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு திட்டம்!

இந்த திட்டம் கடந்த 2020 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர், வாடகை வீட்டில் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு தொடர்ந்து ஓர் பிரச்சனை ஏற்படுவது என்றால் அது ரேஷன் கார்டில் உள்ள முகவரியே. அவர்கள் பல முறை வீடு மாறுவதால் ரேஷன் கார்டுகளில் முகவரியையும் தொடர்ந்து மாற்றும் நிலை ஏற்படுகிறது. தற்போது இதனை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்ற முடியும் என்பதற்கான எளிய வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

ஆன்லைனில் ரேஷன் கார்டு முகவரி மாற்றம்:

  • முதலில் www.pdsportal.nic.in என்ற அரசின் அதிகாரபூர்வ தளத்திற்குள் நுழைய வேண்டும்.
  • அதில் முகப்பு பக்கத்தில் உள்ள மாநில அரசு இணையதளங்கள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் உங்கள் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • இதையடுத்து ரேஷன் கார்டு முகவரி மாற்றம் அல்லது ரேஷன் கார்டு படிவத்தில் மாற்றம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் உங்கள் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
  • அதில் கேட்கப்படும் உங்கள் முகவரி குறித்த விவரங்களை சரியாக பதிவு செய்து SUBMIT என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதை செய்த சில நாட்களில் உங்கள் முகவரி மாற்றப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. என் பெயர் சபியுல்லா எனது ரேஷன் கார்டு சக்கரை கார்டாக உள்ளது. அதை அரிசி கார்டாக மாற்றி தரவும்.
    ஸ்மார்ட் கார்டு எண். 333560132306.
    செல் நம்பர். 8883120091

  2. நாங்கள் குடும்ப அட்டை விண்ணப்பித்து அங்கிகாரம் கிடைத்து விட்டது ஆனால் மின்னணு அட்டை வாங்க இல்லை. அதற்குள் நாங்கள் வேறு மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து போய்விட்டோம் எப்படி வாங்குவது என்று தெரியவில்லை.

  3. புதிய மிண்ணனு அட்டை பெறுவதற்கு முன் முகவரி மற்றும் ரேஷன் கடை மாற்றம் செய்வது எப்படி என்று கூறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!