வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் போது பி.எப் கணக்கை மாற்றுவது எப்படி? முழு விவரம்!!

0
வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் போது பி.எப் கணக்கை மாற்றுவது எப்படி? முழு விவரம்!!
வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் போது பி.எப் கணக்கை மாற்றுவது எப்படி? முழு விவரம்!!
வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் போது பி.எப் கணக்கை மாற்றுவது எப்படி? முழு விவரம்!!

நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக இருந்து ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறி சென்ற பின்னர் PF கணக்கை எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

PF மாற்றம்:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும். இபிஎப்ஓ சட்டத்தின் படி, 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

SMS மூலமாக நடைபெறும் புதிய வகை மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

எதிர்காலத்தில் தேவைக்கு இந்த தொகை பெரிதும் உதவியாக இருக்கும். இந்நிலையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வரும் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர், வேறு நிறுவனத்திற்கு மாறி சென்ற பின்னர் பல நேரங்களில் பி.எப் கணக்கை மாற்றாமல் உள்ளனர். மேலும் பழைய நிறுவனத்தில் நாம் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டோம் என அப்டேட் செய்யாமல் விட்டு விடுகிறது. இதனால் நாம் நம்முடைய கணக்கில் இருக்கும் பாக்கியை புதிய கணக்கிற்கு மாற்றுவதற்குள் பெரும் சிரமம் ஏற்படுகிறது. அவ்வாறு கஷ்டப்படும் பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய மாற்றம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பயனாளர்கள் வேலையை விட்டு நின்று விட்டால் அந்த தேதியை எளிதாக அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த புதிய அப்டேட் மூலமாக இனி பணத்தை வேறொரு கணக்கிற்கு மாற்றுவது அல்லது இ.பி.எஃப்.ஓ கணக்கை ‘க்ளோஸ்’ செய்வது போன்றவை சுலபமாகிறது.

எளிய வழிமுறைகள்:
  • முதலில் unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface இணையத்திற்கு செல்ல வேண்டும்.
  • யூ.ஏ.என் பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை உள்ளீடாக தந்து லாக் – இன் செய்ய வேண்டும்.
  • புதிதாக வரும் பாப்-அப்பில் மேனேஜ் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக Exit Step என்ற ஆப்சன் வரும்.
  • அதில் எம்ப்ளாய்மெண்ட் என்ற பகுதி உங்கள் யூ.ஏ எண்ணில் இணைக்கப்பட்டிருக்கும் பழைய பி.எஃப் எண் இருக்கும்.

TN Job “FB  Group” Join Now

  • அதில் நீங்கள் எந்த காரணத்திற்காக, எப்போது வேலையை விட்டு நின்றீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.
  • பிறகு ரெக்வஸ்ட் ஓடிபியை க்ளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு உங்களுக்கு கிடைத்த பாஸ்வேர்டை உள்ளீடாக கொடுத்து பாக்ஸ்டெப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அப்டேட் கொடுத்தவுடன் நீங்கள் வேலை விட்டு நின்ற தேதி அப்டேட் ஆகிவிடும். ஆனால் இந்த ப்ராசஸ் முழுமையாக முடிக்க இரண்டு மாதங்கள் ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!