கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

கனரா வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்ட் தொலைந்து விட்டால் அதற்காக கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு பிளாக் செய்யும் எளிய முறையை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

டெபிட் கார்ட் :

இந்தியாவில் வங்கி சேவை என்பது முக்கிய அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக உள்ளது. கடந்த மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போதும் வங்கிகள் பகுதி நேரம் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்தது. மேலும் கொரோனா நேரத்தில் மக்கள் முடிந்தளவு வங்கிகளுக்கு வராமல் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியது. மேலும் வங்கி வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் மற்றும் டோர் ஸ்டெப் சேவையை பயன்படுத்தும்படி வங்கிகள் அறிவுறுத்தியுள்ளது.

செப்டம்பர் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

தற்போது டெபிட் கார்டு வேண்டி விண்ணப்பிப்பது மிக எளிதான முறையாகி விட்டது. முன்பெல்லாம் வங்கிக்கு சென்று உரிய படிவத்தை பூர்த்தி செய்து டெபிட் கார்டு பெற வேண்டும். ஆனால் இப்போது ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே டெபிட் கார்டு பெறலாம். அதே நேரம் எதிர்பாராத விதமாக டெபிட் கார்டு தொலைந்தால் அதை ஆன்லைன் மூலம் எளிதாக பிளாக் செய்யும் வசதியை கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இல்லையெனில் இலவச எண்ணை பயன்படுத்தி பிளாக் செய்யலாம்.

டெபிட் கார்ட் பிளாக் செய்யும் முறைகள்:

  • முதலில் கனரா வங்கியின் 1800 425 0018 என்ற கஸ்டமர் கேர் நம்பருக்கு கால் செய்ய வேண்டும்.
  • அதில் உங்கள் மொழியை தேர்ந்தெடுத்து டெபிட் கார்டு தொலைந்து விட்டது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அப்போது உங்களின் பெயர், அக்கவுண்ட் நம்பர் போன்ற அக்கவுண்டை உறுதிப்படுத்துவதற்கான சில கேள்விகள் கேட்கப்படும்.
  • அதற்கு நீங்கள் சரியான பதிலை அளித்தவுடன் சில வினாடிகளில் கார்டு பிளாக் செய்யப்பட்டு விடும்.
  • இல்லையெனில் மெசேஜில் CAN HOTLISTDC என்ற இடத்தில் உங்கள் டெபிட் கார்டில் 16 இலக்க நம்பரை டைப் செய்து 5607060 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும், உங்கள் டெபிட் கார்டு பிளாக் செய்யப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!