ஆன்லைனில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்ப பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
மத்திய மற்றும் மாநில அரசுகள் தரும் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு முக்கியமான ஆவணமாக ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டுகளை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்வதற்கு தற்போது எளிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கார்டு விண்ணப்பம்
இந்திய அரசு தரும் உதவித்தொகைகள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட சலுகைகளை பெற்றுக்கொள்ள ரேஷன் கார்டுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவற்றில் மிக முக்கியமாக தனி நபர் அடையாளம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் சரிபார்ப்புக்கும் இந்த ரேஷன் அட்டைகள் பயன்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டுகள் தற்போது அட்டை வடிவத்தில் இருந்து மாற்றமடைந்து ஸ்மார்ட் கார்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகிறது. தமிழகத்திலும் புதிதாக ரேஷன் கார்டுகள் பெற்றுக்கொள்ளும் நபர்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகளே கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 63.63 லட்சம் பேர் பதிவு – வெளியான தகவல்!
இவ்வகை ஸ்மார்ட் கார்டுகளின் முக்கியத்துவம் என்னவென்றால், இதை வைத்திருக்கும் ஒருவரால் எந்தவொரு இடத்தில் இருந்தும், எந்த மாநிலத்திலும் இருந்தவாறே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்திலும் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு, கார்டுகளை அச்சடிக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் துவங்கியுள்ளது. தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுகளை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க மத்திய அரசு புதிய ஏற்பாடுகளை செய்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதற்காக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, புகைப்படம், சாதி சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், மின் ரசீது, கேஸ் பில் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படும். இந்த ஆவணங்களை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி,
- முதலில் TNPDS வலைதளத்துக்குள் சென்று Smart Card Application என்பதை கிளிக் செய்யவும்.
- அதில் குடும்பத்தலைவர், வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
- பிறகு குடும்ப உறுப்பினர், அடையாள அட்டை விவரங்களை உள்ளிட வேண்டும்.
- அடுத்து 10KB என்ற வகையில் png, gif, jpeg, jpg என்ற பார்மேட்டில் உள்ள புகைப்படத்தை பதிவு செய்யவும்.
- தொடர்ந்து LPG கேஸ் விவரங்களை பதிவு செய்து, Submit கொடுக்கவும்.
- இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு குறிப்பு எண் கொடுக்கப்படும்.
- இந்த எண்ணை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட் கார்டு விண்ணப்ப நிலவரத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.