இனி ‘இ-சேவை’ மையத்திலேயே புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல் & திருத்தம்!

0
இனி 'இ-சேவை' மையத்திலேயே புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல் & திருத்தம்!
இனி 'இ-சேவை' மையத்திலேயே புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல் & திருத்தம்!
இனி ‘இ-சேவை’ மையத்திலேயே புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல் & திருத்தம்!

இந்தியாவில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், ஆதார் எண் இணைத்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் இ-சேவை மையத்தில் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இ-சேவை மையம்:

இந்தியாவில் ரேஷன் கார்டு திட்டம் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். கடந்த மாதங்களில் தீவிரமாக பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கில் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள், நிவாரண நிதிகள் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பாக அரிசி, கோதுமை, போன்றவைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தில் அக்.2ம் தேதி கிராம சபை கூட்டம் – ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை உத்தரவு!

இந்தியா முழுவதும் வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்காக ரேஷன் கடைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், ஆதார் எண் இணைத்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் இ-சேவை மையத்தில் மேற்கொள்ளலாம் என இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் பிற விவரங்களை இணைத்தல் போன்றவற்றிக்கு உணவு வழங்கல் துறைக்கு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

பாலிடெக்னிக் கல்லூரிகள் இன்று முதல் திறப்பு – நேரடி வகுப்புகளுக்கு அனுமதி!

கொரோனா அதிகம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி இந்த சூழலில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க மேற்கண்ட நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ரேஷன் பொருட்கள் வினியோக திட்டத்தை புறநகர் மற்றும் ஊரக பகுதிகளில் வலுப்படுத்த உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் முடிவு செய்து இ-சேவை மையத்துடன் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன் படி ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் திருத்தம் புதிய கார்டுக்கு விண்ணப்பித்தல் காணாமல் போனதற்கு மாற்று போனதற்காக புதிய கார்டுக்கு விண்ணப்பித்தல், ஆதார் எண் இணைத்தல் போன்ற பணிகளை நாடு முழுவதும் உள்ள 3.7 லட்சத்திற்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் மூலம் எளிதில் மேற்கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!