அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – பெயர்களை சேர்ப்பது எப்படி?

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - பெயர்களை சேர்ப்பது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - பெயர்களை சேர்ப்பது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – பெயர்களை சேர்ப்பது எப்படி?

இந்தியாவில் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டில் ஆன்லைன் மற்றும் அலுவலகம் சென்றும் எளிதாக குடும்பத்தில் உள்ள புதிய உறுப்பினர்களை சேர்க்கலாம். அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஊரடங்கு மாதங்களில் அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகள் மூலமும் நிவாரணங்களை பெற்று மக்கள் பயனடைந்தனர். குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து ரேஷன் அட்டைகளின் தரநிலை 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் அதே மாநிலத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – தேசிய திறனாய்வுத் தேர்வு ஹால் டிக்கெட்!

தற்போது ஆன்லைன் மூலமாக எளிதாக வீட்டிலிருந்தபடியே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ரேஷன் கார்டில் குடும்பத்தில் மருமகள் அல்லது குழந்தைகள் போன்ற புதிய உறுப்பினர்களின் பெயர்களையும் சேர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் அளவை பொறுத்து தன மாதந்தோரும் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படும். ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது போல பெயர் சேர்த்தல் நீக்குதல் போன்ற வேலைகளையும் ஆன்லைன் மூலமாகவே செய்யலாம்.

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் இலேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

அதற்கான வழிமுறைகள் கீழ்க்கண்டவாறு, ஒரு உறுப்பினர் திருமணத்திற்குப் பிறகு குடும்பத்திற்கு வந்தால், முதலில் அவரது ஆதார் அட்டையில் புதுப்பிக்கவும். பெண் உறுப்பினரின் ஆதார் அட்டையில் கணவரின் பெயர் இருக்க வேண்டும். வீட்டில் குழந்தை பிறந்தால், முதலில் பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை கொண்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here