WhatsApp ல் உங்களை யாராவது Block செய்திருந்தால் கண்டுபிடிப்பது எப்படி?

0
WhatsApp ல் உங்களை யாராவது Block செய்திருந்தால் கண்டுபிடிப்பது எப்படி?
WhatsApp ல் உங்களை யாராவது Block செய்திருந்தால் கண்டுபிடிப்பது எப்படி?
WhatsApp ல் உங்களை யாராவது Block செய்திருந்தால் கண்டுபிடிப்பது எப்படி?

வாட்ஸ்அப் செயலி அனைத்து மெசேஜிங் செயலிகளையும் போலவே மற்றொரு நபரை Block செய்யும் வசதியை கொண்டுள்ளது. ஆனால் அந்த நபர் அது குறித்த அறிவிப்பு எதையும் பெறமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் செயலி:

வாட்ஸ்அப் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியாகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமல்லாமல் KaiOS அம்சம் கொண்ட சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப்ல் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.

அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம் – ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!

அனைத்து மெசேஜிங் செயலிகளையும் போல, நாம் மற்றவர்களை Block செய்யும் வசதியும் உள்ளது. மேலும், Block செய்யப்பட்ட நபர் இது குறித்து எந்த அறிவிப்பையும் பெற மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்படி Block செய்யப்பட்டுள்ளதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது என்பதற்கு சில வழிகாட்டிகள் உள்ளது. அதன்படி, நாம் மற்றவர்களால் Block செய்யப்பட்டிருப்பதை தெரிந்து கொள்ளலாம். இது குறித்து வாட்ஸ்அப் வலைத்தளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒருவரின் ‘Last Seen’ அல்லது ‘Online’ ல் உள்ளார்களாக என்பதையும் Block செய்யப்பட்டவர்களால் பார்க்க முடியாது.

TN Job “FB  Group” Join Now

ஆனாலும் ‘Privacy’ காரணமாகவும் ஒருவர் அதனை மறைத்து வைத்திருக்கலாம். Block செய்யப்பட்டவர்களால் அவரின் DP ஐ பார்க்க முடியாது. ஆனால் அந்த நபர் DP வைக்காமலும் இருக்கலாம். மிக முக்கியமாக, நாம் அனுப்பிய செய்தி அவருக்கு செல்லாது. அதனால் ஒரு டிக் மட்டுமே தோன்றும். ஆனால் அதற்கு இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும் அப்படி திரையில் தோன்றும். அதேபோல், Block செய்யப்பட்டவருக்கு கால் செல்லாது. அதற்கும் இணைய இணைப்பு இல்லாதது காரணமாக இருக்கலாம். உங்களை வேறு யாராவது Block செய்துள்ளார்களா என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்ல முடியாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!