தமிழக அரசின் முதல் பட்டதாரி சான்றிதழ் – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!

0
தமிழக அரசின் முதல் பட்டதாரி சான்றிதழ் - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!
தமிழக அரசின் முதல் பட்டதாரி சான்றிதழ் - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!
தமிழக அரசின் முதல் பட்டதாரி சான்றிதழ் – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!

தமிழக அரசு முதல் பட்டதாரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. தற்போது இந்த சான்றிதழை பெற ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம்.

முதல் பட்டதாரி சான்றிதழ்:

தமிழக அரசு மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி அவர்களை படிக்க ஊக்குவித்து வருகிறது. அதே போல பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – உடனடியாக வழங்க கோரிக்கை!

முதல் பட்டதாரி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபரின் அப்பா, அம்மா, தந்தை, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா என யாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது. இந்த சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் பட்டதாரி சான்றிதழ் பெற விரும்பும் மாணவர் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி, வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி பத்திரம், குடும்ப உறுப்பினர்கள், அனைவருடைய கல்வி சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் https://www.tnesevai.tn.gov.in/ என்னும் இணைய முகவரியை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதனை தொடர்ந்து விண்ணப்பதாரர் Revenue Department ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அதன் பின்னர் First Graduate Certificate என்பதை தேர்வு செய்து ரிஜிஸ்டர் நம்பரை கிளிக் செய்ய வேண்டும். அந்த எண் தெரியாதவர்கள் விண்ணப்பதாரர் பெயர் மற்றும் தந்தையின் பெயரை கொடுக்க வேண்டும். அதன் பின் வழங்கப்படும் மொபைல் எண் அளித்து ஓடிபி பெற்றுக் கொள்ளலாம். அதனை தொடர்ந்து Proceed செய்து பின்வரும் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பத்தை சரியாக நிரப்ப வேண்டும். தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்த பின் Self Declaration Form வரும். அதை ஒப்பிட்டு ஸ்கேன் செய்து பதிவேற்றி பின் ஆன்லைன் கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன் பின் மொபைல் எண்ணிற்கு வரும் குறுஞ்செய்தியின் மூலம் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!