தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

1
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

புதிதாக ரேஷன் கார்டு வேண்டுபவர்கள் ஆன்லைனில் எளிதான முறையில் வீட்டிலிருந்தே அப்ளை செய்து விடலாம். அவ்வாறு புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிப்பது பற்றிய முழுவிபரங்களை தான் நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

புதிய ரேஷன் கார்டு:

நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக அடையாள அட்டையாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. அதனை போல் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் முக்கியமான ஆவணமாக ரேஷன் கார்டு உள்ளது. ஆதார் கார்டு வருவதற்கு முன்பு ரேஷன் கார்டு தான் அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஆவணமாக இருந்து வந்தது. அத்தகைய ரேஷன் கார்டு பெற இப்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவ.20ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

பெரும்பாலும் புதிதாக திருமணமானவர்கள் தான் புதிய ரேஷன் கார்டு பெற வேண்டியிருக்கும். அவ்வாறு புதிய ரேஷன் கார்டு பெற விரும்புபவர்கள் கீழே வரும் முறைகளை பின்பற்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பதற்கு முன்னர் ஏற்கனவே உள்ள பழைய ரேஷன் கார்டில் இருந்து உங்களது பெயரை நீக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு நீக்கம் செய்தால் மட்டுமே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் முறைகள்:
  • புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதற்கு முதலில் www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • இணையதளத்தில் மின்னணு அட்டை ஆப்ஷனை தேர்வு செய்து, மின்னணு அட்டை விண்ணப்பிக்க ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் உங்களது முழு விபரங்களை உள்ளிட வேண்டியிருக்கும். அதாவது, குடும்பத் தலைவர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி, மாவட்டம், வட்டம், கிராமம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விபரங்களை பதிவிட வேண்டும்.
  • பின்னர் குடும்பத் தலைவர் புகைப்படம் என்ற குடும்ப தலைவர் புகைப்படத்தை jpeg, jpg, png ஆகிய ஏதாவது ஒரு ஃபார்மேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த புகைப்படம் 5 MB க்குள் இருக்க வேண்டும்.
  • குடும்பத்தலைவர் அல்லது உறுப்பினரை சேர்ப்பதற்கு உறுப்பினரை சேர்க்க என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உறுப்பினர்களை சேர்த்த பின்பு மற்ற ஆவணங்கள் என்ற இடத்தில் அவர்களது முழு விபரங்களை அதாவது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம், புதிய கட்டுப்பாடுகள் – அதிரடி அறிவிப்பு!

  • பின்பு அட்டை தேர்வு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து பண்டகமில்லா அட்டை, அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, மற்றவை என்றிருக்கும் நான்கில் எந்த வகை ரேஷன் அட்டை வேண்டுமோ அதனை தேர்வு செய்ய வேண்டும்.
  • குடும்ப தலைவர் விபரங்களை சேர்த்தது போலவே மற்ற உறுப்பினர்களின் விபரங்களையும் சேர்க்க வேண்டும்.
  • அதன் பின்னர் குடியிருப்புச் சான்று என்ற இடத்தில் ஆதார் அட்டை, மின்சாரக் கட்டணம், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி ரசீது, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்ற வேண்டும்.
  • அதனை தொடர்ந்து எரிவாயு இணைப்பு விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறாக அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு உறுதிப்படுத்து பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின் ஓரிரு தினங்களில் உங்களது விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை நீங்கள் www.tnpds.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். அதனை தொடர்ந்து பல்வேறு நடைமுறைகளை தொடர்ந்து உங்களது வீட்டிற்கு விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.
  • இவ்வாறாக அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு பதிவு எண் வரும். அதனை வைத்து வட்ட அலுவலகத்திற்கு சென்று உங்களது புதிய ரேஷன் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
  • மேலும் இது குறித்த விபரங்களை அறிய 1967 or 1800-425-5901 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. நீங்கள் என்னதான் இணையதளம் வழியாக
    குடும்பஅட்டை கொடுத்தாலும் ,நான் 5 முறையாக விண்ணப்பம் கொடுத்தும் விண்ணப்பம் நிராகரித்து அனுப்பி விட்டார்கள் ,சரி சிதம்பரம் அலுவலகம் சென்று கொட்டால் அவர்கள் ரூ.4000 லஞ்சம் கொடுத்தால் 5 நாளில் குடும்ப அட்டை தருவதாக சொல்ரங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!