இனி ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் – எளிய வழிமுறைகள் இதோ!!

0
இனி ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் - எளிய வழிமுறைகள் இதோ!!
இனி ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் - எளிய வழிமுறைகள் இதோ!!
இனி ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் – எளிய வழிமுறைகள் இதோ!!

இன்றைய டிஜிட்டல் காலத்தில் மக்களுக்கு பயனடையும் வகையில் பல செயல்பாடுகள் மிக எளிமையாக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பெறும் வசதி. தற்போது அதன் வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டு:

முந்தைய காலத்தை விட தற்போதைய காலத்தில் அறிவியல் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது அனைத்து துறையும் மின்னணுமயமாக்கப்பட்டு வருகிறது. அதனை மனிதர்களும் மிக எளிமையாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு இதனை எளிமையாக்கும் வகையில் ஜிபே (Gpay), பேடிஎம் (Paytm) போன்ற செயலிகள் அறிமுகமானது.

TN Job “FB  Group” Join Now

இதன் மூலம் மக்கள் அனைவரும் மிக எளிமையாக பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இதனை மிகவும் எளிமையாக்கும் வகையில் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பயனாளர்கள் இனி ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதனை ஏடிஎம் இயந்திரத்தை தயாரிக்கும் NCR நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது முதல் கட்டமாக 1500 இயந்திரங்களில் இந்த அம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவை முந்தும் இந்தியாவின் பொருளாதாரம் – சர்வதேச நிதியம் கணிப்பு!!

வழிமுறைகள்:

  • ஏடிஎம் இயந்திரத்தில் ஓர் QR Code இடம்பெறும்.
  • அதனை பயனாளர்கள் தங்களது ஜிபே, பேடிஎம் போன்ற செயலி மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • பின்பு பயனாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு Proceed என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து 4 இலக்க அல்லது 6 இலக்க UPI PIN நம்பரை பதிவு செய்யவேண்டும்.
  • பின்பு பயனாளர்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
  • இந்த வழிவகை மூலம் பயனாளர்கள் முறை ஒன்றுக்கு ரூ.5,000 மட்டுமே பெறமுடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here