SSC சுருக்கெழுத்தர் தேர்வு நவ.11 முதல் துவக்கம் – தேர்வு மையங்கள் & நுழைவுச் சீட்டு விவரங்கள் இதோ!

0
SSC சுருக்கெழுத்தர் தேர்வு நவ.11 முதல் துவக்கம் - தேர்வு மையங்கள் & நுழைவுச் சீட்டு விவரங்கள் இதோ!
SSC சுருக்கெழுத்தர் தேர்வு நவ.11 முதல் துவக்கம் - தேர்வு மையங்கள் & நுழைவுச் சீட்டு விவரங்கள் இதோ!
SSC சுருக்கெழுத்தர் தேர்வு நவ.11 முதல் துவக்கம் – தேர்வு மையங்கள் & நுழைவுச் சீட்டு விவரங்கள் இதோ!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் சுருக்கெழுத்தர் பணிக்கான தேர்வுகள் வரும் நவம்பர் 11,12 மற்றும் 15 ஆகிய தினங்களில் நடைபெற இருப்பதாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

தேர்வு அறிவிப்பு

கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பேரலை தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சுருக்கெழுத்தர் C மற்றும் D நிலைத்தேர்வு இம்மாதம் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணை செயலரும் தென்மண்டல இயக்குநருமான கே.நாகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சுருக்கெழுத்தர் C மற்றும் D நிலைத்தேர்வு நவ. 11,12 மற்றும் 15 ஆகிய தினங்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரையும் நடைபெற இருக்கிறது.

8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.8ம் தேதி பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள் தொடக்கம்!

கணினி வழியாக மேற்கொள்ளப்பட இருக்கும் இத்தேர்வில் தென்மண்டலத்தை சார்ந்த சுமார் 49,609 பேர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் தேர்வு மையங்களை பொருத்தளவு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டத்திலும் ஆந்திரா மாநிலம் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் தெலுங்கானாவின் ஹைதராபாத் மற்றும் வாரங்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சுமார் 23 இடங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தோர் கவனத்திற்கு – ரூ.3000 வரை உதவித்தொகை!

இப்போது இந்த தேர்வில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கான முன்னணி அனுமதி சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை தேர்வர்கள் தேர்வு நடைபெறும் 4 நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் 044 2825 1139 மற்றும் 94451 95946 ஆகிய எண்களை அணுகலாம் என தெரிவிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!