WhatsApp ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ப்ரொபைல் மூலம் ஸ்டேட்டஸ் பார்க்கும் வசதி!

0
WhatsApp ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ப்ரொபைல் மூலம் ஸ்டேட்டஸ் பார்க்கும் வசதி!
WhatsApp ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ப்ரொபைல் மூலம் ஸ்டேட்டஸ் பார்க்கும் வசதி!
WhatsApp ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ப்ரொபைல் மூலம் ஸ்டேட்டஸ் பார்க்கும் வசதி!

உலகின் முன்னணி தகவல் தொடர்பு தளமான வாட்ஸ் அப் செயலி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ் அப் ப்ரொபைல் மூலம் ஸ்டேட்டஸ்களை பார்த்துக்கொள்ள முடியும்.

புதிய அம்சம்:

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம், ஒரு புதிய வசதியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த புதிய செயல்பாடுகள் மூலம் வாட்ஸ் அப் பயனர்கள் தங்கள் Profile Picture மூலம் ஸ்டேட்டஸ்களை பார்க்க முடியும். இது தொடர்பான WABetaInfo அறிக்கையின்படி, ‘வாட்ஸ் அப் செயலியில் இந்த அம்சம் தற்போது வளர்ச்சியில் உள்ளது. அதனுடன் பயனர்களின் ஸ்டேட்டஸ்களை சேட் பிரிவில் பார்க்கும் திறனை இது மேலும் விரிவாக்கும்.

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கல்? அரசுக்கு கோரிக்கை!

அதில் பயனர்கள் Profile Picture ஐ திறந்து ஸ்டேட்டஸ்களை காணும் விருப்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்’ என தெரிவித்துள்ளது. இந்த அம்சமானது முதலில் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.21.17.5 வாட்ஸ் அப்பில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இது இன்னும் வளர்ச்சியில் உள்ளது எனவும் இவை பயன்பாட்டுக்கு வரும் போது, பயனரின் ஸ்டேட்டஸ் அல்லது அவர்களின் Profile Picture ஐ பார்க்க வேண்டுமா என்ற ஆப்சன் பயனருக்கு வழங்கப்படும். இப்புதிய அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ் அப் பயனர் ஒரு நபரின் Profile Picture ஐ கிளிக் செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் குறிப்பிட்ட ஒரு நபரின் ஸ்டேட்டஸ்களை பார்க்க பயனர்கள் ஸ்டேட்டஸ் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இது ட்விட்டர் செயலியில் இருக்கும் Fleets போன்றதாகும். இந்த அம்சம் வாட்ஸ் அப் பயனர்களது பயன்பாட்டுக்கு எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற விளக்கம் கொடுக்கப்படவில்லை. என்றாலும் WABetaInfo அறிக்கை எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்று கூறுகிறது. சமீபத்தில், வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய அப்டேட் மூலம் iOS பயனர்கள் தங்களது சேட்கள் அனைத்தையும் Android க்கு மாற்ற செயலி அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!