சென்னை அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை – முதல்வர் அறிவிப்பு!

0
சென்னை அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை - முதல்வர் அறிவிப்பு!
சென்னை அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை - முதல்வர் அறிவிப்பு!
சென்னை அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை – முதல்வர் அறிவிப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாமல் சிலை வைக்கப்படும் என அவர் கூறினார்.

அண்ணா சாலையில் சிலை:

தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து வேளாண்மை துறைக்கென முதன்முதலில் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது துறை வாரியாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு வினாத்தாள் மாற்றம்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு நினைவிடம் கட்டுவது குறித்த வரைபடம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அவருக்கு சிலை வைக்க வேண்டும் என கோரப்பட்டு வருகிறது. திராவிட கழக தலைவர் வீரமணி உள்ளிட்ட பல தரப்பினர் அண்ணா சாலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என தனது கோரிக்கையை முன் வைத்தனர். அவர்களது கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் பதிலளித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

பல தரப்பினர் கோரிக்கை முன்வைத்ததை தொடர்ந்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து, சென்னை அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். மேலும் இந்த சிலை வைக்கப்படும் காலகட்டத்தில் மக்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் முதலிய அரசியல் தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து கருணாநிதி அவர்களின் சிலை அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!