இந்தியாவில் பல மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – பள்ளிகளுக்கு விடுமுறை!
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுமே மழைப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. தற்போது எந்தெந்த மாநிலங்களில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்பதற்கான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.
மழைப்பொழிவு:
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் அஸ்ஸாமில் வெள்ளம் புரண்டு ஓடி கொண்டிருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் 6.62 லட்ச பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். தர்ராங் மாவட்டத்தில் மட்டுமே இது வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2.88 லட்சம் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கச்சாரில் 1.2 லட்ச பொதுமக்களும், ஹோஜாயில் 1.07லட்ச பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் இத்துறை ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
இதனையடுத்து ஒடிசா மாநிலத்திலும் வலுவான தென்மேற்கு காற்று மற்றும் கிழக்கு-மேற்கு பள்ளம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு அடுத்த வாரமே கடுமையான வெப்பநிலை நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு இரண்டு முதல் மூன்று டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோத்பூர் மற்றும் பிகானேர் ஆகிய பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
பெங்களூரிலும் அதிகமான மழை பொலிவின் காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மத்திய மகாராஷ்டிரா, தெற்கு கொங்கன் மற்றும் மராத்வாடாவின் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் விதர்பா மாவட்டங்களில் மே 17 முதல் 21 வரைக்கும் கூட கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என கூறப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.