மாநில செய்திகள் – ஜூலை 2019

0

மாநில செய்திகள் – ஜூலை2019

இங்கு ஜூலை மாதத்தின் மாநில செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2019
ஜூலை மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

அசாம்

தலைநகரம்

முதல்வர்

ஆளுநர்

டிஸ்பூர் சர்பானந்தா சோனோவால் ஜெகதீஷ் முகி

சிறை கைதிகளுக்கு போங்கைகானில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் தொடங்கியது

  • அசாமில், சிறைக் கைதிகளுக்காக போங்கைகான் மாவட்டத்தில் மூன்று மாத திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிறைக் கைதிகள் தங்களது தண்டனைக் காலத்தில் பலனளிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த முக்கிய குறிக்கோளைத் தவிர்த்து, கைதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்களின் வேலைவாய்ப்பு திறனை இந்தப்பயிற்சி திட்டம் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவஹாத்தியையும் டாக்காவையும் இணைக்கும் முதல் சர்வதேச விமானத்தை அசாம் முதல்வர் துவக்கிவைத்தார் .

  • அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் குவஹாத்தியையும் டாக்காவையும் இணைக்கும் முதல் சர்வதேச விமானத்தை குவஹாத்தியில் உள்ள போர்ஜார் விமான நிலையத்தில் துவக்கிவைத்தார். இந்த இணைப்பு வடகிழக்கு மாநிலங்களுடனான இணைப்பை உயர்த்தியுள்ளது என்று அவர் கூறினார் . அசாம் அரசு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் என மூன்று வருடங்களுக்கு   இதற்ககான ஒதுக்கியுள்ளது. காத்மாண்டு, யாங்கோன், ஹனோய் மற்றும் கோலாலம்பூருக்கான விமானங்களுடன் குவஹாத்தி-பாங்காக்கை இணைக்கும் மற்றொரு விமானமும் அடுத்த சில மாதங்களில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேசம்

தலைநகரம்

முதல்வர்

ஆளுநர்

ஹைதராபாத்  (அமராவதி) ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி ஸ்ரீ பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன்

கர்னூல் மாவட்டத்தில் ஒன்பது புதிய எஃப்.பி.ஓக்கள் அமைக்கப்பட உள்ளன

  • கர்னூல் மாவட்டத்தில் ஒன்பது புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) அமைக்க தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) 102 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. அவற்றில் இரு அமைப்புகள் மீன் வளத்தை ஊக்குவிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்னூலில் இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விழியநகரத்தில் புதிய பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு

  • ஆந்திராவின் விழியநகரத்தில் வனத்துறை அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் ஆமை விளக்க மையம் [Turtle Interpretation Centre] திறக்கப்பட்டது.

அருணாச்சல பிரதேசம்

தலைநகரம்

முதல்வர்

ஆளுநர்

இட்டாநகர் பெமா காண்டு பி. டி. மிஸ்ரா.

மத்திய அரசு இட்டாநகரில் மூன்று சிறந்த விளையாட்டு மையங்களை அமைக்க உள்ளது

  • அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் மூன்று சிறந்த விளையாட்டு மையங்களை மத்திய அரசு விரைவில் அமைக்க உள்ளதாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். மேலும் இவ்விளையாட்டு மையம் தற்காப்பு கலைகள், பளு தூக்குதல் மற்றும் குத்துச்சண்டைக்கான பிரத்யேக சிறப்பு மையமாக இருக்கும் என திரு ரிஜிஜு கூறினார்.

அருணாச்சல பிரதேசத்தில் 2880 மெகாவாட் திபாங் திட்டத்திற்கு சி.சி.இ.ஏ ஒப்புதல் அளித்துள்ளது

  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, சி.சி.இ.ஏ 1600 கோடி ரூபாய் செலவில் அருணாச்சல பிரதேசத்தில் 2880 மெகாவாட் திபாங் பல்நோக்கு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கட்டிமுடித்த பிறகு இந்த அணை 278 மீட்டர் உயரமுள்ள நாட்டின் மிக உயரமான அணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

சுத்தமான-பசுமை அருணாச்சல் பிரச்சாரம் 2019’

  • முதலமைச்சர் பெமா காண்டு இட்டாநகரில் மாநிலம் தழுவிய மரம் தோட்டத் திட்டத்தை ‘சுத்தமான-பசுமை அருணாச்சல் பிரச்சாரம் 2019’யை தொடங்கினார். வான் மஹோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 1 கோடி மரம் நடும் இலக்கை நிர்ணயித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு & காஷ்மீர்

தலைநகரம்

ஆளுநர்

ஸ்ரீநகர் சத்ய பால் மாலிக்

ஆபரேஷன் குமார்

  • ஜம்மு-காஷ்மீரில் 312 பஞ்சாயத்துகளை புகையிலை இல்லாததாக மாற்ற ஜம்மு பிரிவின் எல்லை மாவட்டமான ராஜோரியில் “ஆபரேஷன் குமார்” என்று ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களிலிருந்து பஞ்சாயத்துகளை விடுவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் இந்த திட்டம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜோரி அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி தேவையான வழிமுறைகளை வழங்கினார்.

ஜம்மு & காஷ்மீரில் இரண்டு பாலங்களை திறந்து வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்

  • கத்துவா மாவட்டத்தில் 1000 மீட்டர் நீளமுள்ள உஜ் பாலம் மற்றும் சம்பா மாவட்டத்தில் 617.40 மீட்டர் நீளமுள்ள பசந்தர் பாலம் ஆகியவற்றை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

ஜே & கேவில் பி.எம்.ஜி.எஸ்.ஒய்-கட்டங்கள் I முதல் XII வரை 3502 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன

  • 2214 வாழ்விடங்களை இணைக்க மொத்தம் 19700 கி.மீ நீளமுள்ள பிரதமரின் கிராம சதக் யோஜனா (பி.எம்.ஜி.எஸ்.ஒய்) 3502 திட்டங்களின் மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பி.எம்.ஜி.எஸ்.ஒய்-கட்டங்கள் I முதல் XII வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்கள் மாடல் சமூக வசதிகளாக மாற்றப்பட வேண்டும்

  • ஜம்மு-காஷ்மீர் அரசு அங்கன்வாடி மையங்களை மாநிலத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான அதிநவீன மாதிரி சமூக வசதிகளாக மாற்றுவதற்கான ஒரு லட்சிய திட்டத்தை வகுத்தது. முதல் கட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போதுள்ள 50 அங்கன்வாடி மையங்கள் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ உடன் இணைப்பதன் மூலம் மாற்றப்படும்.

ஜம்முகாஷ்மிரின் உத்தம்பூர் மாவட்ட நிர்வாகம்ஜீனே தோஎன்ற ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்துகிறது

  • ஜம்மு-காஷ்மீரில், உத்தம்பூர் மாவட்ட நிர்வாகம் “ஜீனே தோ” என்ற ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. பாலின விகிதத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு நிதியளிக்கப்பட்ட பேடி பச்சாவ் பேடி பதாவோ திட்டத்தின் கீழ் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிதல் தடுப்புச் சட்டம் (பிசிபிஎன்டிடி) சட்டத்தை மீறுபவர்களை கையாள்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கர்நாடகம்

தலைநகரம்                     

முதல்வர்

ஆளுநர்

பெங்களூரு பி.எஸ்.யெடியூரப்பா வஜுபாய் வாலா

நீர் பாதுகாப்பின் மிகவும் பொதுவான பாரம்பரிய அமைப்புகள்

  • கடலோர கர்நாடகாவில் பின்பற்றப்படும் மிகவும் பொதுவான நீர் பாதுகாப்புக்கான பாரம்பரிய பாதுகாப்பு முறைகளில் ஒன்று மதகா ஆகும். இது ஒரு தனித்துவமான பாரம்பரிய நீர் பாதுகாப்பு நடைமுறையாக இருந்தது. பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியில் ஒரு பக்கத்தில் வரப்பு போன்ற இயற்கை தடுப்புகள் அமைப்பதன் மூலம் சேறும் சகதியுமான நிலப்பரப்பில் பெரிய அளவிலான நீர் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவின் புதிய சபாநாயகர் ஆக விஸ்வேஸ்வர் ஹெக்டே தேர்வு
  • சபாநாயகர் ரமேஷ் குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து, சிர்சி சட்டமன்றத் தொகுதியின் ஆறு முறை எம்.எல்.ஏவுமான பாஜகவின் மூத்த தலைவர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி கர்நாடகாவின் புதிய சபாநாயகராக தேர்வாகி உள்ளார்.

கேரளம்

தலைநகரம்                     

முதல்வர்

ஆளுநர்

திருவனந்தபுரம் பினராயி விஜயன் பி.சதாசிவம்

ஆதியா பழங்குடியினர் ‘நடூஜியல்’ கலையைத் தொடங்கினார்கள்

  • வயநாட்டில் உள்ள ஆதியா பழங்குடியினர், பொதுமக்களின் செழிப்புக்காக மலை மாவட்டத்தின் கிராமங்களில் தங்களது சடங்கு கலை வடிவமான ‘நடுகாதிகா’வின் ஒரு பகுதியாக ‘நடூஜியல்’ என்னும் கலையை தொடங்கியுள்ளனர்.கண்ணூர் மாவட்டம் கோட்டியூரில் உள்ள மகாதேவா கோவிலில் வைஷாகா பண்டிகைக்குப் பிறகு வழக்கமாக இந்த சடங்கு தொடங்கும்.

யானை மறுவாழ்வு மையத்தை கேரள அரசு அமைக்கவுள்ளது

  • கேரள அரசு நாட்டில் முதன்முதலில் ரூ.105 கோடி ரூபாய் செலவில் அனாதையான அல்லது கைவிடப்பட்ட யானைகளை கவனித்துக்கொள்வதற்கும் யானை மறுவாழ்வு மையம் அமைக்கவுள்ளது. இம்மறுவாழ்வு மையத்தில் யானைகள் அருங்காட்சியகம், மஹட் பயிற்சி மையம், நன்கு நவீனமயமாக்கப்பட்ட கால்நடை மருத்துவமனை மற்றும் யானைகளை தகனம் செய்யும் இடம் ஆகியவையம் அமைக்கப்படவுள்ளது.

இராஜஸ்தான்

தலைநகரம்                     

முதல்வர்

ஆளுநர்

ஜெய்ப்பூர் அசோக் அசோக் கெஹ்லோட் கல்யாண் சிங்

சாப்ரா சூப்பர் கிரிட்டிகல் வெப்ப மின் நிலையத்தின் 5 மற்றும் 6 வது யூனிட்

  • ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெஹ்லாட் சாப்ரா சூப்பர் கிரிட்டிகல் வெப்ப மின் நிலையத்தின் 5 மற்றும் 6வது யூனிட்டை  திறந்து வைத்தார். இது சூப்பர் கிரிட்டிகல் வெப்ப மின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மாநிலத்தின் முதல் திட்டமாகும், மேலும் இந்த திட்டத்தின் செலவு மதிப்பு 9 ஆயிரத்து 550 கோடி ரூபாய் ஆகும்.

கலு காவல் நிலையம் உள்துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டில் 1 வது இடத்தைப் பிடித்துள்ளது

  • ராஜஸ்தானில், பிகானேர் மாவட்டத்தில் உள்ள கலு காவல் நிலையம் குற்றக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. கலு காவல் நிலையம் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள 15,666 காவல் நிலையங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டில் முதல் இடத்தைப் பிடித்தது.

38வது உலக யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பிங்க் சிட்டி ஜெய்ப்பூர் தேர்வு

  • அசர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 43 வது அமர்வின் போது, ​​ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கக்கோரிய இந்தியாவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டின் பல்வேறு யுனெஸ்கோ வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஜெய்ப்பூர் நகரத்தின் பரிந்துரை வெற்றிகரமாக செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலக பாரம்பரிய தளமாக ஜெய்ப்பூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 38 உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன, அவற்றில் 30 கலாச்சார தளங்கள், 7 இயற்கை தளங்கள் மற்றும் 1 கலப்பு தளம் உள்ளன.

மகாராஷ்டிரா

தலைநகரம்             

முதல்வர்

ஆளுநர்

மும்பை தேவேந்திர ஃபட்னாவிஸ் சென்னமணி வித்யாசாகர் ராவ்

கோட்பந்தர் கோட்டையின் மறுசீரமைப்பு

  • போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட தானேவில் உள்ள 18 ஆம் நூற்றாண்டின் கோட்பந்தர் கோட்டையின் மறுசீரமைப்பு அடுத்த மாதம் தொடங்கி 2020 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் நினைவுச்சின்னத் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ், கோட்டை மீரா பயந்தர் மாநகராட்சியால் தத்தெடுக்கப்பட்டுள்ளது. கோட்டையின் மறுசீரமைப்பு பணியையும் இந்த மாநகராட்சி மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 1730 ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை, பின்னர் 1737 இல் சிமாஜி அப்பாவின் தலைமையில் மராட்டியர்களால் கைப்பற்றப்பட்டது. 1818 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றும் வரை கோட்டை மராட்டியர்களின் கைகளில் இருந்தது, அந்தக்கோட்டையை மாவட்ட நிர்வாகத்தின் தலைமையகமாக மாற்றியது கிழக்கிந்திய கம்பெனி. குதிரை வர்த்தகம் செய்ததன் மூலம் கோட்டைக்கு இந்தப்பெயர் வந்தது குறிப்பிடத்தக்கது.

பணியில் இருக்கும்போது உயிர்த்தியாகம் செய்யும் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கு வழங்கும் இழப்பீட்டை மகாராஷ்டிரா அரசு உயர்த்தியுள்ளது

  • பணியில் இருக்கும்போது தங்கள் உயிரை நாட்டுக்காக தியாகம் செய்யும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கு வழங்கும் இழப்பீட்டை 25 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. சர்வ சிக்ஷா திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை 1500 ரூபாய் உயர்த்தி, 21,500 ரூபாயாக வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்தது. இந்த முடிவு 1900 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயனளிக்கும்.

சராசரி மழைப்பொழிவை விட 72% அதிகமாக மும்பையில் பெய்துள்ளது

  • இந்த பருவத்தில் சராசரி மழைப்பொழிவு 72% சதவீதத்திற்கும் அதிகமாக மும்பையில் பெய்துள்ளது.

மத்தியப்பிரதேசம்

தலைநகரம்             

முதல்வர்

ஆளுநர்

போபால் கமல்நாத் ஆனந்திபென் படேல்

மத்தியப்பிரதேசம் விரைவில் தனது சொந்த விதைகளை உற்பத்தி செய்யவுள்ளது

  • மத்திய பிரதேசத்தில், சான்றளிக்கப்பட்ட மற்றும் உயர்தர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதுடன், மத்திய பிரதேச மாநில கூட்டுறவு விதைக்கூட்டமைப்பு விதைகளை உற்பத்தி செய்யவும் உள்ளது. விதைகளின் பிராண்ட் பெயர் ‘சா-பீஜ்’ ஆகும். அடுத்த ராபி பயிர் பருவத்திலிருந்து விதைகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தூரிலிருந்து துபாய்க்குமுதல் சர்வதேச விமானம் புறப்பட்டது

  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரின் தேவி அஹில்யா பாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் சர்வதேச விமானம் 153 பயணிகளுடன் துபாய் புறப்பட்டது.இந்த இடைவிடா விமானம் வளைகுடா பகுதிகளுடன் நேரடி இணைப்பிற்கான பயணத்தையும், சுற்றுலாப் பயணிகளிடமிருந்த நீண்டகால விருப்பத்தையும் நிறைவேற்றியுள்ளது.

தெருவில் உள்ள பசுக்களுக்கு மத்திய பிரதேசம் ‘வீட்டுத்திட்டம்’ தொடங்க உள்ளது

  • கவுஷாலா திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பிரதேச மாநில அரசு தெருவில் உள்ள 7 லட்சம் பசுக்கள் மற்றும் காளைகளை கிராமங்களுக்கு அருகிலுள்ள தங்குமிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் 7 லட்சம் விலங்குகள் தங்குவதற்கு 1,000 தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

மேற்கு வங்காளம்

தலைநகரம்             

முதல்வர்

ஆளுநர்

கொல்கத்தா மம்தா பானர்ஜி ஜகதீப் தங்கர்

மேற்கு வங்க அரசு, நீர் சேமிப்பு தினத்தை அனுசரித்து.

  • மேற்கு வங்க அரசு ஜூலை 12,2019 யை நீர் சேமிப்பு தினமாக அனுசரித்து . மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது அரசாங்கம் 2011 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலம் முழுவதும் குளங்களை தோண்டுவதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்கியதாக   கூறியுள்ளார். மேலும் நீர் பற்றாக்குறையை சமாளிக்க இதுவரை சுமார் 3 லட்சம் குளங்கள்   தோண்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பர்தாமன் ரயில் நிலையத்திற்கு பதுகேஷ்வர் தத்தின் பெயர் சூட்டப்பட உள்ளது

  • மேற்கு வங்காளத்தின் பர்தாமன் ரயில் நிலையத்திற்கு புரட்சிகர சுதந்திர போராட்ட வீரர் பதுகேஷ்வர் தத்தின் பெயர் சூட்டப்பட உள்ளது. பர்தாமன் மாவட்டத்தில் பிறந்த சுதந்திரப் போராளியான பதுகேஷ்வர் தத், டெல்லியில் உள்ள தேசிய சட்டமன்றத்தில் குண்டுகளை வீசியதற்காக பகத்சிங்குடன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லி

முதல்வர்

ஆளுநர்

அரவிந்த் கெஜ்ரிவால் அனில் பைஜால்

 10 வது ஜாக்ரான் திரைப்பட விழா

  • ஜூலை 18 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள சிரி கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 வது ஜாக்ரான் திரைப்பட விழா நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார். மேலும் மக்களின் வாழ்க்கையில் சினிமாவின் முக்கியத்துவத்தையும் அதன் தாக்கத்தையும் அவர் எடுத்துரைத்து இது மக்களை இணைக்கும் ஒரு ஊடகம் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் சினிமாவின் வரலாற்று வளர்ச்சியையும், இந்தியாவின் மென்மையான சக்தியின் டிரான்ஸ்போர்ட்டராக இந்திய சினிமாவின் வளர்ந்து வரும் தாக்கத்தை குறித்தும் கூறினார்.

டெல்லி போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக புதிய இ-சலான் அமைப்பு, மின் கட்டண நுழைவாயில் முறை தொடக்கம்.

  • டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் டெல்லி போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக புதிய இ-சலான் முறையையும் மின் கட்டண நுழைவாயில் முறையையும் தொடங்கி வைத்துள்ளார்.இ-சலான் சாதனங்கள் செயலில் உள்ள ஜி.பி.எஸ் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா

தலைநகரம்             

முதல்வர்

ஆளுநர்

ஹைதராபாத் கே.சந்திரசேகர் ராவ் நரசிம்மன்
திரிபுராவில் மின் திட்டங்களுக்கு ஏடிபி சுமார் 2000 கோடி ரூபாய் வழங்கவுள்ளது
  • திரிபுராவில் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக 1,925 கோடி ரூபாய் திட்டத்தை ஆசிய மேம்பாட்டு வங்கி அனுமதித்துள்ளது. ரோக்கியா திட்டத்தின் திறனை மேம்படுத்துவதற்கும், கும்தி ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்தை நவீனப்படுத்துவதற்கும் இந்த திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது

திரிபுராவுக்கு  சாலை திட்டதிற்காக 358 கோடி ரூபாயை    வழங்கியது.

  • மத்திய அரசு திரிபுரா மாநிலத்திலுள்ள கிராமப்புறங்களில் புதிய சாலைகள் அமைக்க கூடுதல் தொகையாக ரூபாய் 358 கோடியை வழங்கியது. மேலும் இது மாநிலத்தில் முடிக்கப்படாத திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை முடிக்க மாநில அரசுக்கு உதவியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7வது பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பின் களப்பணி திரிபுராவில் தொடங்கப்பட உள்ளது

  • 7வது பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பின் களப்பணி 2019 ஜூலை 29 அன்று திரிபுரா மாநிலத்திலும், விரைவில் புதுச்சேரியிலும் தொடங்கப்படுகிறது. பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் களப்பணி 2019 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.

தெலுங்கானா

தலைநகரம்             

முதல்வர்

ஆளுநர்

ஹைதராபாத் கே.சந்திரசேகர் ராவ் நரசிம்மன்

WEF மையம், தெலுங்கானா அரசு ட்ரோன்கள் வழியாக மருத்துவ பொருட்களை அனுப்பவுள்ளது

  • தெலுங்கானா அரசாங்கமும் நான்காவது தொழில்துறை புரட்சி வலையமைப்பிற்கான உலக பொருளாதார மன்றத்தின் மையமும் ட்ரோன்கள் மூலம் ரத்தம் மற்றும் தடுப்பூசிகள் போன்ற அவசர மருத்துவ பொருட்களை வழங்குவதற்கான ஒரு புதுமையான திட்டத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளன. இது சுகாதார வழங்கல் முறையில் முடிவெடுப்பதை எளிதாக்க உதவும், கடைசி தூர விநியோகங்களில் கவனம் செலுத்துதல் மற்றும் மருத்துவ விநியோக முறையை பாதிக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.சி.எம்.பி.யில் என்.எஸ்.ஜி வசதி

  • ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் அடுத்த தலைமுறைக்கான வரிசைமுறை (என்.எஸ்.ஜி) வசதியை சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார். இந்த வசதியில் உயர் மரபணு வரிசைப்படுத்துதலுக்கான தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ மாதிரிகளைக் கண்டறியும் வரிசைமுறை ஆகியவை அடங்கும்.

உத்தரபிரதேசம்

தலைநகரம்             

முதல்வர்

ஆளுநர்

கொல்கத்தா மம்தா பானர்ஜி ஜகதீப் தங்கர்

இரண்டு புதிய திறன் மையங்கள் (CoE)

  • உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோருக்கு இடையில் லக்னோவில் நடைபெற்ற சந்திப்பில், இரண்டு சிறந்த திறமை மையத்தை (CoEs) அமைக்க கூட்டு முடிவு எடுக்கப்பட்டது – பிளம்பிங்கிற்கான சிறந்த திறமை மையம் கிரேட்டர் நொய்டாவிலும்; சேவைத் துறைக்கு வாரணாசியிலும் அமைக்கப்படவுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கட்டணமில்லா முதலமைச்சர் ஹெல்ப்லைன் 1076 ஐ அறிமுகப்படுத்தியது

  • உத்தரபிரதேசத்தில், மாநில அரசு கட்டணமில்லா முதலமைச்சர் ஹெல்ப்லைன் 1076 ஐ அறிமுகப்படுத்தியது, இது மாநிலம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் தங்கள் புகார்களைப் பதிவுசெய்ய உதவும், மேலும் புகார்கள் குறித்து அவசரகால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்யும்.

PDF Download

மாநில செய்திகள்Video – ஜூன் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்

Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!