மாநில செய்திகள் – ஏப்ரல் 2019

0
மாநில செய்திகள் – ஏப்ரல் 2019
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 2019

இங்கு ஏப்ரல் மாதத்தின் மாநில செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஏப்ரல் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

 ஆந்திரா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
அமராவதி நாரா சந்திரபாபு நாயுடு ஈ.எஸ். எல். நரசிம்மன்

திருப்பதி ரயில் நிலையம் பசுமை முன்முயற்சிக்கான தங்க மதிப்பீட்டை பெற்றுள்ளது

  • இந்திய பசுமை கட்டிடம் கவுன்சில் (ஐ.ஜி.சி.சி) பயணிகளின் வசதிகள் அடிப்படையில் பசுமை முன்முயற்சிக்கான தங்க மதிப்பீட்டை திருப்பதி ரயில் நிலையத்திற்கு வழங்கியுள்ளது. இந்திய இரயில்வே சுற்றுச்சூழல் இயக்குனரகத்துடன் இணைந்து, ஐ.ஜி.சி.சி-சிஐஐ (IGBC-CII), பசுமை ரயில் நிலைய மதிப்பீட்டு முறையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு கோதாவரியில் உள்ள நெல் விவசாயிகள் பாதிப்பு

  • நெல் கொள்முதல் மையங்களை (பிபிசி) நிறுவுவதில் தாமதம் மற்றும் ‘போண்டலு’ (MTU-3626) நெல் சாகுபடிக்கு சந்தை இல்லாத நிலையால், தற்போதைய ராபி பருவத்தில் கிழக்கு கோதாவரி மாவட்ட விவசாயிகளின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிக ரீதியாக விற்பனை செய்ய புதிய மீன் இனத்தை வளர்க்கும் முயற்சி

  • சதுப்புநில சிவப்பு ஸ்னாப்பர் (Lutjanus argentimaculatus) மீன் வகையை வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் முயற்சியை கிருஷ்ணா கரையோரத்தில் தொடங்கியுள்ளனர். ஆந்திரப் பிரதேசம் உப்பு நீர்த்தேக்கங்களில் இவ்வகை மீன்களை அதிகளவில் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்கிறது.
  • வெண் புள்ளி வைரஸ் தொற்று காரணமாக சமீபத்தில் கடலோர ஆந்திரப் பிரதேச நீர்த்தேக்கங்களில் வளர்க்கப்பட்ட வண்ணமெய் மீனுக்கு மாற்றாக இந்த சதுப்புநில சிவப்பு ஸ்னாப்பர் மீன் அமையும் எனத் தகவல்.

கடந்த 5 ஆண்டுகளில் விஜயவாடா விமான நிலையம் பயணிகள் போக்குவரத்தில் 500% வளர்ச்சி

  • 2018 ஏப்ரல் முதல் மார்ச் 2019 வரையிலான காலப்பகுதியில், கன்னவரம் நகரிலுள்ள விமான நிலையத்தில், 11.84 லட்சம் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் பயணித்துள்ளனர், 58.7% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பயணிகள் போக்குவரத்து 2014 ஆம் ஆண்டு முதல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது, இந்த ஆண்டில் தான் மாநிலம் பிளவுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

VPTயின் பசுமை விருது

  • நாட்டின் சுற்றுச்சூழல் நட்பு துறைமுகங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் துறைமுகம் (VPT) AP Greenery மற்றும் Beautification Corporation ன் பசுமை விருதினை வென்றுள்ளது. இது இந்தியாவின் தரக் கவுன்சிலின் இரண்டாவது சுத்திகரிக்கப்பட்ட துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சல பிரதேசம்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
இட்டாநகர் பெமா கந்து B. டி. மிஸ்ரா

AFSPA ஆயுத படை கண்காணிப்பை பகுதியாக குறைத்துள்ளது

  • 32 ஆண்டுகளுக்கு பிறகு, அருணாச்சல பிரதேசத்தில் ஒன்பது மாவட்டங்களில் இருந்த ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (AFSPA) கண்காணிப்பை 3 மாவட்டங்களில் பகுதியாக குறைத்துள்ளது.

உத்திரப்பிரதேசம்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
லக்னோ யோகி ஆதித்யநாத் ராம் நாயக்

 ஜூவர் விமான நிலையத் திட்டம்

  • முன்மொழியப்பட்ட ஜூவர் விமான நிலையத்திட்டம் 2001 ஆம் ஆண்டில் திட்டமிட்டபடி முக்கிய கட்டமான நிலம் கையகப்படுத்தலை எட்டியுள்ளது.

ஒடிசா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
புவனேஸ்வர் நவீன் பட்நாயக் கணேசி லால்

ஒடிசா 84 வது ‘உக்கல் திவாஸ்’

  • ஒடிசா அதன் உருவாக்க தினத்தின் 84வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. 1936 ல் ஒடிசா மாகாணத்தை உருவாக்குவதற்காக மக்கள் செய்த தியாகங்களை நினைவுகூறும் நாள் எனப்படும் ‘உக்கல் திவாஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன், மொழியியல் அடிப்படையில் உருவான முதல் மாநிலம் ஒடிசா என்பது குறிப்பிடத்தக்கது. 1936 ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஒடிசா பீகாரில் ஒரு பகுதியாக இருந்தது.

கார்டிப்பில் ஹோம்லெஸ் (Homeless) கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு கேரள இளைஞன் தேர்வு

  • 20 வயதான ஆலன் சோலமன் ஜூலை 27 அன்று கார்டிஃப்ல் நடக்கவுள்ள ஹோம்லெஸ் (Homeless) கால்பந்து உலகக் கோப்பைபோட்டி 17 வது பதிப்பில் விளையாடவுள்ள நமது நாட்டு எட்டு வீரர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கர்நாடகா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
பெங்களூரு எச்.டி.குமாரசுவாமி வஜூபாய் வாலா

 பெங்களூரில் இந்திய கூட்டு பதிவகம் (IJR)

  • இந்திய தேசிய இடுப்பு மற்றும் முழங்கால் அறுவை சிகிச்சை நிபுணர்களின் சங்கம் பெங்களூரில் இந்திய கூட்டு பதிவகத்தை (IJR) தொடங்கியுள்ளது.
  • இந்திய தேசிய இடுப்பு மற்றும் முழங்கால் அறுவை சிகிச்சை (ஐ.எஸ்.ஹெச்.கே.எஸ்) சங்கத்தின் 13 வது பதிப்பு கூட்டத்தில் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் கோரின் வில்சன் கூட்டு பதிவகத்தை (IJR) தொடங்கிவைத்தார்.

 மைசூர்வாரணாசி எக்ஸ்பிரஸ் LHB பெட்டிகளை பெற்றது

  • மைசூரிலிருந்து வாரணாசி செல்லும் இரயில் பெட்டிகள் ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை) ரேக்கை பயன்படுத்தியது அதற்கு பதிலாக இப்போது லின்க் -ஹோஃப்மான்-புஷ்ச் ரேக்கை பயன்படுத்துவதால் நல்ல பயண வசதிகளை பெறுவதாக தெரிவித்தனர்.

கர்நாடகத்தில் அதிகளவு வாக்குப்பதிவு சாதனை

  • 1956 ல் கர்நாடக மாநிலம் உருவானதிலிருந்து நடைபெற்ற தேர்தல்களில் மிக அதிகளவில் வாக்குப்பதிவு சாதனை. அதிகபட்சமாக மண்டியாவில்76% வாக்குகள் உயர்ந்துள்ளது அது மட்டுமின்றி அதிகளவு வாக்குப்பதிவும் (80.23%) இங்கு பதிவாகியுள்ளது.

கேரளம்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
திருவனந்தபுரம் பினராயி விஜயன் பி. சதாசிவம்

உச்சநீதிமன்றம் கேரள உயர்நீதிமன்ற EPFO தீர்ப்பிற்கு எதிரான ​​மனுவை நிராகரித்தது

  • ஊழியர் ஓய்வூதியம் (திருத்தம்) திட்டத்தை (ஜிஎஸ்ஆர் 609 (ஈ)) ஒதுக்கி வைத்து, கேரள உயர் நீதிமன்றத்தில் அக்டோபர் 2018 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உலக புனரமைப்பு மாநாட்டில் கேரளா வெள்ளம் குறித்த அறிக்கை இடம்பெறவுள்ளது

  • மே 13 மற்றும் 14, 2019ல் ஜெனீவாவில் நடைபெறும் நான்காவது உலக புனரமைப்பு மாநாட்டில் (WRC) 2018 ஆம் ஆண்டு வெள்ளம் மற்றும் அதனை சீர்படுத்த தொடங்கப்பட்ட மீளமைப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, இடம்பெறவுள்ளது.

ISRO பெவிலியன்

  • திரிசூர் பூரம் கண்காட்சியில் அமைக்கப்பட்ட ISRO பெவிலியனில் Gaganyaan விண்வெளி வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட விண்வெளி ஆடைத்தொகுதி மற்றும் முன்மொழியப்பட்ட சிறிய சேட்டிலைட் வெளியீட்டு வாகனத்தின் (SSLV) அளவிலான மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் (VSSC), இயக்குனர் எஸ். சோம்நாத், ISRO பெவிலியனை திறந்துவைத்தார்.

தமிழ்நாடு

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
சென்னை எடப்பாடி கே. பழனிசாமி பன்வரிலால் புரோஹித்

தமிழக லோகாயுக்தா தலைவர் – ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. தேவதாஸ்

  • ஆளுநர் ஐந்து உறுப்பினர் லோகாயுக்தாவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. தேவதாஸ் அவர்களை நியமித்துள்ளார்.
  • முன்னாள் மாவட்ட நீதிபதிகளான கே.ஜெயபாலன் மற்றும் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதித்துறை உறுப்பினர்களாகவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ராஜரம் மற்றும் வழக்கறிஞர் கே. ஆறுமுகம் ஆகியோர் ஊழல் எதிர்ப்புக் குழுவின் நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை விமானநிலையத்தில் மெட்ரோ ரயில் நேரங்களை காட்சிப்படுத்தப்பட ஏற்பாடு

  • விமான பயணிகள் போக்குவரத்து முறைமையை ஊக்குவிக்க, சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச வாயில்களில் மெட்ரோ ரயில் நேரங்களைக் காட்சிக்குரியதாக்கும் ஏற்படுகளை விரைவில் செய்யவுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அறிவுரை

  • சென்னை உயர்நீதிமன்றம், சீன வீடியோ பயன்பாட்டு செயலி Tik Tok ஐ தடை செய்ய மத்திய அரசுக்கு அறிவுரை. மேலும் ஊடகங்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்தி செய்த வீடியோக்களை ஒளிபரப்புவதை நிறுத்தவும் அறிவுரைத்துள்ளது

கி.மு. 905 முதல் 696 வரையிலான காலப்பகுதியை சார்ந்தது – ஆதிச்சநல்லூர்

  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சி தளத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மாதிரிகளின் கார்பன் டேட்டிங் தகவல்களின் மூலம் ஆதிச்சநல்லூர் கி.மு. 905 முதல் கி.மு. 696 வரையிலான காலப்பகுதியில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
  • கார்பன் டேட்டிங் மாதிரிகள் அறிக்கை அமெரிக்காவின் பீட்டா அனாலிடிக் சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டடு பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சூரிய சக்தியால் இயங்கும் முதல் படகு விரைவில் இயக்கப்பட உள்ளது

  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் சூரிய சக்தியால் இயக்கும் முதல் படகு விரைவில் இயக்கப்பட முயற்சி. கலக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகத்தின் தரவுகளின்படி, அடுத்த 10 நாட்களில் படகு இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவல்.

தமிழ்நாடு லோக் சபா தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு

  • தமிழ்நாட்டில் ஏப்ரல் 18, 2019 அன்று, 38 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற்றது. இதல் 72விழுக்காடு வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானின் யான்மார், நிசி, நிறுவன கிளையை சென்னையில் திறக்க முடிவு

  • யான்மார் குழுமம் மற்றும் ஜப்பானின் நிசீ எலக்ட்ரிக் ஆகியவற்றின் முதல் உற்பத்தி நிலையங்களை சென்னை, பொன்னேரியில் அமைக்க முடிவு.

தெலுங்கானா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
ஹைதெராபாத் கே. சந்திரசேகர் ராவ் எஸ். லட்சுமி நரசிம்மன்

உலக பாரம்பரிய தளமாக ராமப்பா கோயில் அமையவுள்ளது

  • தெலுங்கானா தனது முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தை பெறவுள்ளது, வாரங்கல் அருகே உள்ள பாலம்பேட்டிலுள்ள ராமப்பா கோவில் ஆகும்

பெல்ஜியத்திற்கான கெளரவ தூதர் நியமனம்

  • டாக்டர் ரெட்டிஸ் ஆய்வுக்கூடத்தின் இணை தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜி.வி. பிரசாத்தை பெல்ஜியத்திற்கான கெளரவ தூதராக ஹைதராபாத்தில் நியமனம் செய்துள்ளது.

கலேஷ்வரம் நீர்ப்பாசன திட்டம் வெற்றி

  • பெடபள்ளி மாவட்டத்தில் நந்தி மேதரம் அருகே பேக்கேஜ் -6 பம்ப் வீடு அருகே கலேஷ்வரம் நீர்ப்பாசன திட்டத்தின் முதல் பகுதி வெற்றி அடைந்தது.

 மகாராஷ்டிரா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
மும்பை தேவேந்திர பத்னாவிஸ் வித்யாசாகர் ராவ்

உச்ச நீதிமன்றம் நீண்ட கால தாமதம் காரணமாக என்ரான்-டாபோல் வழக்கை தள்ளுபடி செய்தது

  • அமெரிக்காவின் என்ரான் மற்றும் அதன் கூட்டு நிறுவனமான டாபோல் பவர் கார்ப்பரேஷன் மூலமாக மகாராஷ்டிராவில் டபோல் மின் திட்டம், 1996-ல் நிறுவப்பட்டது.
  • என்ரான் நிறுவனம் ஊக்குவித்த டபோல் மின் ஆலை அமைப்பதில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குக்கான நீதித்துறை விசாரணை வழக்கு 17 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்ததால் உச்ச நீதிமன்றம்வழக்கை தள்ளுபடி செய்தது.

PDF Download

பொது அறிவு பாடக்குறிப்புகள்  PDF Download

பாடம் வாரியான குறிப்புகள் PDF Download

To Read in English: Click Here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூப்பில் சேரகிளிக்செய்யவும்

Telegram Channel ல் சேர கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!