தமிழகத்தில் மாநில திட்ட அலுவலர் பணி – 26ம் தேதி கடைசி நாள்!

0
தமிழகத்தில் மாநில திட்ட அலுவலர் பணி - 26ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் மாநில திட்ட அலுவலர் பணி - 26ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் மாநில திட்ட அலுவலர் பணி – 26ம் தேதி கடைசி நாள்!

தமிழகத்தில் மாநில தத்து வள ஆதார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்ட அலுவலர் பணியில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து வகையான போட்டித்தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதையடுத்து தற்போது அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தீவிரமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இதையடுத்து தற்போது சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிற மாநில தத்து வள ஆதார மையத்தில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் திட்ட அலுவலர் பணியிடத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 26ம் தேதி மாலை 5.30 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு – சூப்பரான அறிவிப்பு

அத்துடன் விண்ணப்ப படிவத்தை இயக்குனர், மாநில தத்து வள ஆதார மையம், சமூக பாதுகாப்புத் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-10 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும்.  அத்துடன் விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுதலான தகவல்கள் இருப்பின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான மேலும் கூடுதலான தகவல்களை பெற http://www.tn.gov.in/job_opportunity என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!