12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – மாநில அரசுகள் அறிவிப்பு!
உத்தரகண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
பொதுத்தேர்வு ரத்து:
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநில கல்வி வாரியங்களும் பொதுத்தேர்வுகளை தள்ளி வைத்திருந்தது. பொதுத்தேர்வுகளை ரத்து செய்யுமாறு பல தரப்புகளில் இருந்தும் அரசுகளுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தேர்வுகள் நடத்தப்படும் என்று மாநில அரசுகள் தெரிவித்து வந்தது.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் பிரதமர் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சிபிஎஸ்இ வாரியத்தின் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் மாநில அரசுகளும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே, 1.23 லட்சம் மாணவர்கள் நடப்பு ஆண்டு 12 ம் வகுப்பு தேர்வுகளை பதிவு செய்திருந்தனர். கொரோனா பரவல் காரணத்தால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
TNEB டிஜிட்டல் மீட்டரில் வீட்டின் மின் பயன்பாட்டை அறிவது எப்படி? பொதுமக்கள் கவனத்திற்கு!
தொடர்ந்து ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்து, மாநில கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். கொரோனா மூன்றாம் அலை பரவல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதாக கூறினார். புதிய கல்வி ஆண்டு ஜூன் 7ம் தேதி முதல் தொடங்கும் என்று அவர் கூறினார். சிபிஎஸ்இ வாரியத்தை தொடர்ந்து சி.ஐ.எஸ்.சி.இ, குஜராத், மத்தியபிரதேசம் ஆகிய கல்வி வாரியங்களும் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.