18 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு? மாநில அரசு குளறுபடி!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால், முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அந்த தகவலை மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மறுத்துள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்
நாடு முழுவதும் பரவிய கொரோனா 2 ஆம் அலை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது மஹாராஷ்டிரா. இந்த மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பானது சராசரியாக ஒரு நாளில் 80 ஆயிரத்துக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டு வந்தது. இதன் காரணமாக மே மாத துவக்கத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவானது தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பானது குறைந்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்த கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. அந்த வகையில் மாநிலத்தில் உள்ள 36 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 அல்லது அதற்கு கீழ் இருக்கும் 18 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாகவும், இது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை மந்திரி விஜய் வடேடிவார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடைகள் திறப்பு, அரசு அலுவலகங்களுக்கு அனுமதி? முதல்வர் ஆலோசனை!
தொடர்ந்து மஹாராஷ்டிராவின் தானே, நாசிக், பந்தாரா, புல்தானா, கட்சிரோலி, அவுரங்காபாத், சந்திராப்பூர், துலே, நாந்தெட், யவத்மால், ஜல்காவ், ஜல்னா, லாத்தூர், நாக்பூர், வாசிம், வார்தா, பர்பானி, கோண்டியா ஆகிய மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரத்தில், மஹாராஷ்டிராவில் எந்த மாவட்டத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மேலும் தொடரும் என முதல் மந்திரி அலுவலகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
தமிழக அரசு துறைகளுக்கு முக்கிய அறிவிப்பு – தலைமை செயலாளர் சுற்றறிக்கை!!
இது குறித்து விஜய் வடேடிவார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் கொள்கை வடிவிலான முடிவு எடுக்கப்பட்டதே தவிர இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். மந்திரி விஜய் வடேடிவார் அறிவித்த ஊரடங்கு தளர்வுகளும், அதை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மறுத்ததும் அம்மாநிலத்தில் உள்ள கூட்டணி கட்சிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Good