பிப்ரவரி 25 முதல் மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!

0
பிப்ரவரி 25 முதல் மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!
பிப்ரவரி 25 முதல் மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!
பிப்ரவரி 25 முதல் மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!

தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா தினசரி பாதிப்புகள் 400க்கும் கீழே குறைந்திருப்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளிப்பது குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு நாளை (பிப்.25) முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறது.

ஊரடங்கு தளர்வுகள்

சமீப காலமாக தேசிய தலைநகரில் கொரோனா தினசரி பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (DDMA) முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை (பிப்.25) நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் டெல்லி முழுவதும் தற்போது அமலில் இருந்து வரும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது டெல்லியில் தினசரி பாதிப்புகள் 400க்கும் கீழே குறைந்துவிட்டன.

TNPSC 5529 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – மார்ச் 23 கடைசி நாள்!

குறிப்பாக கடந்த பிப்.21 அன்று 360 தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதிக்கு பிறகு முதல் முறையாக பிப்.21 அன்று கொரோனா நேர்மறை விகிதம் ஒரு சதவீதத்திற்கும் கீழே குறைந்தது குறிப்பிடத்தக்கது. இதனை கவனத்தில் கொண்டு லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் தலைமையில் நாளை (பிப்.25) DDMA கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஹாப்பி நியூஸ் சொன்ன அரசு!

இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி 4ம் தேதியன்று நடைபெற்ற DDMA கூட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், இரவு ஊரடங்கு உத்தரவு மட்டும் ஒரு மணி நேரம் மட்டும் குறைக்கப்பட்டு தற்போது இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருந்து வருகிறது. இப்போது இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் பிப்ரவரி 25ம் தேதி முதல் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!