மாநில செய்திகள் – நவம்பர் 2018

0
மாநில செய்திகள் – நவம்பர் 2018
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2018
நவம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

இங்கு நவம்பர் மாதத்தின் மாநில செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

அசாம்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
திஸ்பூர் சர்பானந்த சோனுவால் ஜக்திஷ் முகீ

கவுஹாத்தியை ஆறு தென் ஆசிய நாடுகளுடன் இணைக்கத் திட்டம்

  • கிழக்குக் கொள்கையை செயல்படுத்துவதில் பெருமளவு ஊக்கத்தை கொடுப்பதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாத அளவில் ஆறு தெற்காசிய நாடுகளுடன் கவுஹாத்தியை விமான நிலையத்துடன் இணைக்கத் திட்டம்.

ஆந்திரா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
ஹைதெராபாத் நாரா சந்திரபாபு நாயுடு ஈ.எஸ். எல். நரசிம்மன்

வாகன பதிவுக்கு விரைவில் ஒற்றை குறியீடு எண்கள்

  • வாகனங்களை பதிவு செய்வதற்காக மாவட்ட வாரியான குறியீடுகளை விட்டு வெளியேறுவதற்கும் மாநிலத்தில் ஒற்றை குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்துவதற்கும் ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

கடற்கரை அரிப்பைத் தடுக்க செயற்கை திட்டுகள் அமைக்கத்திட்டம்

  • சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தேசிய கரையோர ஆராய்ச்சி மையம் (NCCR), உலக வங்கி நிதியுதவியுடன் ருசிகொண்டா மற்றும் கங்காவர துறைமுகங்களுக்கிடையில் கடற்கரை அரிப்பை ஆய்வு செய்தது.
  • ஒரு காலநிலை சீரான கடற்கரையை உருவாக்கவும், பெரிய சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஆதரவளிக்கும் உப்பங்கழி மாசுபாட்டை குறைப்பதற்காகவும் இந்திய வானிலை துறை (IMD) செயற்கை திட்டுகள் அமைக்கத்திட்டம்.

‘ஆதாரனா திட்டம்‘

  • மாநில அரசு ரூ.86.03 கோடி மதிப்புள்ள சொத்துக்களை 23,000 ஏழை பயனாளிகளுக்கு எஸ்.டி.பி.சி அடிப்படையில் ஆதாரனா திட்டம் II – பெடாரிகம் பை கெலுப்பு [Pedarikam Pai Gelupu]ன் கீழ் விநியோகித்தது. பல்வேறு அரசு நிறுவனங்களின் மூலம் பயனீட்டாளர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் உபகரணங்களை வழங்குவதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஒரு நிலையான வருமானத்தை பெற இது உறுதி செய்யும்.

உத்திரப்பிரதேசம்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
லக்னோ யோகி ஆதித்யநாத் ராம் நாயக்

அயோத்தியில் பிரம்மாண்ட தீபாவளிக் கொண்டாட்டம் உலக சாதனை படைத்தது

  • அயோத்தியில் நடைபெற்ற பிரம்மாண்ட தீபாவளிக் கொண்டாட்டத்தில் 3 லட்சம் மண் விளக்குகள் அல்லது தீபங்கள் ஏற்றப்பட்டு உலக சாதனையை படைத்துள்ளது.
  • உத்திரப்பிரதேசத்தில் உள்ள புனித சரயூ நதிக்கரையில் இந்த மண் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
  • பைசாபாத் என்னும் வரலாற்று நகரம் இனிமேல் அயோத்தி என்று அழைக்கப்படும் என அறிவிப்பு.

ராணி லட்சுமிபாய் ஜெயந்தி

  • ராணி லட்சுமிபாய் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

திறமையான சுற்றுச்சூழல் கங்கா தோழர்கள் [மித்ராஸ்] பயிற்சிமையம்

  • உத்தரப்பிரதேசத்தில் திறமையான சுற்றுச்சூழல் கங்கா தோழர்கள்[மித்ராஸ்] எனும் நாட்டின் முதல் சுற்றுச்சூழலுக்கான பயிற்சி மையம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் துவங்கியது.
  • கங்கையில் மாசுபடுத்தலின் அளவை அளவிடுவதோடு, புனித நதியை சுத்தமாக வைத்திருக்க பல வழிகளிலும் அரசுக்கு உதவுகிறது.

ஒடிசா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
புவனேஸ்வர் நவீன் பட்நாயக் கணேசி லால்

மாநில அவையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு

  • சட்டசபை மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை ஒதுக்கீடு செய்வதற்கான ஒரு தீர்மானத்தை ஒடிசா சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றியது.

அரிய பழங்குடி மொழிகளுக்கு லெக்சிகன்

  • பழங்குடி மொழிகளை புழக்கத்தில் வைத்திருப்பதற்காக, ஒடிசா அரசு அத்தகைய 21 மொழிகளின் லெக்சிகனை அறிமுகப்படுத்தியது.
  • அனைத்து 21 பழங்குடி மொழிகளிலும் பன்மொழி கல்வி (MLE) மற்றும் முரண்பாடான பழங்குடி மொழிக் கற்றல் தொகுதிகள் ஆகியவற்றிற்கான இருமொழி பழங்குடி அகராதிகள் சிறப்பு வளர்ச்சி கவுன்சில் மூலம் உருவாக்கப்பட்டது.

கார்த்திகை பௌர்ணமி ஒடிசாவில் கொண்டாட்டம்

  • புனிதமான கார்த்திகை மாதத்தின் உச்சநிலையாக கார்த்திகை பௌர்ணமி ஒடிஷாவில் கொண்டாடப்படுகிறது.

கர்நாடகா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
பெங்களூரு எச்.டி.குமாரசுவாமி வஜூபாய் வாலா

டெலிகாம் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் சோதனைக்கான வசதி

  • தேசிய அளவில் டிஜிட்டல் தகவல்தொடர்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் உபகரணங்களை பரிசோதிப்பதற்காக பெங்களூரில் ஒரு வசதி துவங்கப்பட்டுள்ளது.
  • தொலைத் தொடர்புத் துறை, மொபைல் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்கள் உட்பட சில தொலைத் தொடர்பு தயாரிப்புகளை ஏப்ரல் 2019 க்குள் கட்டாயமாக சோதனை செய்யப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

தேசிய பேரழிவு நிவாரண நிதியிடம் இருந்து 546 கோடி ரூபாய் கூடுதல்நிதி உதவி

  • தேசிய பேரழிவு நிவாரண நிதியம், [என்.டி.ஆர்.எஃப்.], கர்நாடகாவிற்கு 546 கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி அளித்தது.

குஜராத்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
காந்திநகர் விஜய் ரூபானி ஓம் பிரகாஷ் கோலி

நீர் பற்றாக்குறையால் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குபுதிய நடவடிக்கை

  • மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது குஜராத் அரசு. 

ஜம்மு & காஷ்மீர்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
ஸ்ரீநகர் (கோடை) ஜம்மு (குளிர்) சத்யா பால் மாலிக்

ஸ்ரீநகர் இந்த பருவகாலத்தின் மிகக் குளிரான இரவை பதிவுசெய்தது

  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், இந்த பருவ காலத்தின் மிகக் குளிர்ந்த இரவாக, குறைந்தபட்சமாக மைனஸ்2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்தது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கிலில் குறைந்தபட்சமாக மைனஸ்0 டிகிரி செல்சியஸ்வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

மத்திய மின்சாரத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கானபேனல்கள்

  • ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு மாநிலத்தில் மத்திய மின் திட்டங்களை திறம்பட செயல்படுத்த பேனல்களை அமைத்துள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது

  • PDP தலைவர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் மக்கள் மாநாடு தலைவர் சஜ்ஜாத் லோன் ஆகியோர் அரசை அமைக்கக் கோரியதன் விளைவாக ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் மாலை மாநிலச் சட்டமன்றத்தை கலைத்தார். .

தமிழ்நாடு

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
சென்னை எடப்பாடி கே. பழனிசாமி பன்வரிலால் புரோஹித்

ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியை தமிழக அரசு அறிவித்தது

  • மாநிலத்தில் பதினோரு கடலோர மற்றும் உள் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியை அறிவித்தார்.

தமிழ்நாடு 41% கடற்கரையை இழந்தது

  • கடந்த இரண்டு தசாப்தங்களில், தமிழ்நாட்டின் கடற்கரையில் 41% இழப்பு கடல் அரிப்பால் ஏற்பட்டுள்ளது. துறைமுக வளர்ச்சி, ஆற்றில் அணை கட்டுதலால் கடலோரப்பகுதிக்கு வண்டல் மண் வருவதை தடுக்கிறது
  • கடல் மட்ட உயர்வு மற்றும் புயல்கள் போன்ற இயற்கையான காரணங்கள் தவிரத்து மேலை குறிப்பிட்டுள்ளவையே கடற்கரை இழப்பிற்கு சில காரணங்கள் ஆகும்.

15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம்தமிழகம் கோரிக்கை

  • மாநிலத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை காண ஏழு பேர் கொண்ட மத்திய குழுதமிழகம் வருகை

  • தமிழ்நாட்டில் கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை கண்டு மதிப்பிட ஏழு பேர் கொண்ட உறுப்பினர் மத்திய குழு சென்னைக்கு வந்தது.

புயல் நிவாரண பொருள்களை இலவசமாக கொண்டுசெல்லஇரயில்வே அனுமதி

  • டிசம்பர் 10 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் இலவசமாக கொண்டு செல்லப்படும் என்று இந்திய இரயில்வே அறிவித்தது.

பீகார்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
பாட்னா நிதீஷ் குமார் லால்ஜி டாண்டன்

பீகாரில் அனைத்து பட்டதாரி பெண்களுக்கும் ரூ .25,000

  • பீகார் அரசு 2018 முதல் பட்டம் பெறும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 25,000 வழங்குவதற்கான ஒரு திட்டத்திற்கு ஒப்புதல்.

ராஜ்கிர் நகரில் 70 அடி உயரம் கொண்ட புத்தர் சிலை பீகார்முதல்வரால் திறக்கப்பட்டது

  • பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜ்கிர், நளந்தா மாவட்டத்தில் 70 அடி உயரமான புத்தர் சிலையை திறந்துவைத்தார்.
  • இது நாட்டின் இரண்டாவது உயரமான புத்தர் சிலை ஆகும். இது இளஞ்சிவப்பு மணற்கற்களால் ஆனது.

பஞ்சாப்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
சண்டிகர் அமரீந்தர் சிங் வி.பி. சிங் பட்னோர்

2019ல் ‘ஜாலியன்வாலா பாக் படுகொலையின்‘ நூற்றாண்டு நினைவுஅஞ்சலி

  • அடுத்த ஆண்டு 2019ல் வரலாற்று நிகழ்வான ஜாலியன்வாலா பாக் படுகொலையின் 100 ஆண்டு நினைவு பெற்றதை நினைவு கூற இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி (100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தினத்தன்று இச்சம்பவம் நடந்தது) நினைவுத்தபால் தலை வெளியிடப்பட உள்ளது.

புது தில்லி

முதல் அமைச்சர் லெப்டினன்ட் கவர்னர்
அரவிந்த் கெஜ்ரிவால் அனில் பைஜல்

ஐஜிஐ விமான நிலையத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவி வசதி

  • புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவி மற்றும் தகவல் வசதியை சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தொடங்கி வைத்தார்.
  • மும்பை, சென்னை, கொல்கத்தா, கயா மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் விரைவில் 24X7 வசதியளிப்பு கவுண்டர்களை திறக்க சுற்றுலா அமைச்சகம் திட்டம்.

மக்களவை பொதுச்செயலாளரின் பதவிக்காலம் ஒரு ஆண்டு நீட்டிப்பு

  • சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மக்களவையின் பொதுச்செயலாளர் சினேகலதா ஸ்ரீவஸ்தவாவின் பதவியை ஒரு ஆண்டு காலம் பதவி நீட்டிப்பு செய்தார்.

டெல்லியின் காற்றுத் தரம் ‘மிக மோசமான‘  நிலைக்கு தள்ளப்பட்டது

  • டெல்லியின் காற்றுத் தரம் ‘மிக மோசமான’ நிலைக்கு தள்ளப்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுப்படி,ஒட்டுமொத்த காற்று தரத்தின் குறியீடு (AQI) 394 ஆக பதிவாகியுள்ளது. இது ‘மிக மோசமான’ காற்றுத் தரப் பிரிவில் வரும்.

இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி

  • புது தில்லி பிரகதி மைதானத்தில் 38வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐ.ஐ.டி.எஃப்) நிகழ்ச்சியை கலாசார அமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா திறந்துவைத்தார். இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் பார்ட்னர் நாடாகவும், நேபாளம் ஃபோகஸ் நாடாகவும் அறிவிப்பு.
  • இந்த ஆண்டின் தீம் – Rural Enterprises in India

வைப்ரண்ட் குஜராத் சாலைக் கண்காட்சி

  • அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவிருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வைப்ரண்ட் குஜராத்-2019 நிகழ்வின் முன்னோட்டமாக டெல்லியில் ஒரு சாலைக் கண்காட்சியை நடத்த உள்ளார் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி.

ஆடி மஹாஉத்சவ் திருவிழா

  • 15 நாள் ஆடி மஹாஉத்சவ் திருவிழா தேசிய தலைநகரான டெல்லியில் தொடங்குகிறது. இந்த விழாவின் சிறப்பம்சமாக பழங்குடி ஜவுளிகள் மற்றும் பழங்குடி உணவுப்பொருட்களைக் கொண்டு அலங்கார அணிவகுப்பு நடைபெறும்.
  • தீம் – ‘Celebration of the spirit of tribal culture, craft, cuisine and commerce’

‘நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில் (IIC)’

  • மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில் (ஐ.ஐ.சி.) திட்டத்தை புது டெல்லியில் துவக்கி வைத்தார்.
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் AICTE யில் ஒரு “கண்டுபிடிப்பு செல்லை” நிறுசியுள்ளது, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் (கண்டுபிடிப்பு) புதுமை கலாச்சாரம் முறையாக வளர்க்கப்பட வேண்டி இதை செய்துள்ளது.

‘HAUSLA-2018’

  • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு (MWCD) அமைச்சகத்தின் ‘HAUSLA-2018’ சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களின் தேசிய குழந்தைகள் விழாவை (CCIs) செயலாளர் திரு ராகேஷ் ஸ்ரீவஸ்தவா, புது தில்லியில் திறந்துவைத்தார்.
  • 2018தீம்  “Child Safety”.

யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்காக ஒரு கூட்டமைப்பை அமைக்கத் திட்டம்

  • பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யு.ஜி.சி., கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளின் (CARE) கூட்டமைப்பு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது.
  • இது அறிவியல் சாராத துறைகளில் நம்பகத்தன்மை வாய்ந்த தரமான பத்திரிகைகளின் புதிய பட்டியலை தயாரிக்கும்.

மகாராஷ்டிரா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
மும்பை தேவேந்திர பத்னாவிஸ் வித்யாசாகர் ராவ்

கும்பல் வன்முறையைக் கையாள சிறப்பு போலீஸ் குழு

  • மகாராஷ்டிராவில் கும்பல் வன்முறையைக் கையாள சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டது.

151 இடங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிப்பு

  • 151 இடங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்தது.

ஐஎன்எஸ் விராட் [INS Viraat] ஒரு மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்றத்திட்டம் 

  • மகாராஷ்டிர அமைச்சரவை, ஐ.என்.எஸ்.விராட் என்ற கப்பல் ஒரு மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்ற அனுமதி அளித்தது. இது மார்ச் 2017 ல் கப்பற்படையிலிருந்து நீக்கப்பட்டது.
  • 852 கோடி ரூபாய் செலவில் பொது-தனியார் கூட்டுறவு (PPP) மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க JNPT திட்டமிட்டுள்ளது

  • நவி மும்பையில் இருக்கும் நாட்டின் மிகப்பெரும் கொள்கலன் துறைமுகம் JNPT யின் வருவாயை அதிகரிக்க மற்றும் சிறைப்படுத்தப்பட்ட சரக்குகளை உறுதிப்படுத்த சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இரண்டாவது மெகா உணவுப் பூங்கா

  • மகாராஷ்டிரா ஔரங்காபாத் மாவட்டத்தில் இரண்டாவது மெகா உணவுப் பூங்காவை உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான மத்திய அமைச்சர் ஸ்ரீ ஹர்சிம்ரத் கவுர் படால் திறந்து வைத்தார்.

மகாராஷ்டிராவில் ஸ்வச்ச பாரத் மிஷன் மூலம் 60 லட்சம்கழிப்பறைகள் கட்டப்பட்டன

  • ஒவ்வொரு குடிமகனும் சுத்தமான கழிப்பறையை எளிதாக அணுகுவதை உறுதி செய்வதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் 60 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டன. மகாராஷ்டிராவைச் சேர்த்து தற்போது மொத்தம் 25 இந்திய மாநிலங்கள் திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத மாநிலங்களாக உள்ளன.

மும்பையில் அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ்இன்ஸ்டிடியூட்

  • திரைப்படம் மற்றும் ஒளிப்பதிவு துறையில் இளைஞரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கு மும்பையில் அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் நிறுவனத்தை அமைக்க அரசு திட்டம்.

மகாராஷ்டிரா அரசு கலப்படம்எதிர்ப்பு சட்டத்தை திருத்தம் செய்யமசோதாவை நிறைவேற்றியுள்ளது

  • மகாராஷ்டிரா அரசு, உணவு மற்றும் பால் கலப்படங்களைக் கட்டுப்படுத்த ஆயுள் தண்டனை மற்றும் கடுமையான தண்டனையை உறுதிப்படுத்துவதற்காக, கலப்படம்-எதிர்ப்பு சட்டத்தை திருத்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றியது.

ஓபிசி ஒதுக்கீட்டில் மாற்றமின்றி மராத்தாவிற்கு இட ஒதுக்கீடு

  • மராத்தா இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொண்டதாக உயர் நீதிமன்றத்திடம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஜய்தாபூர் அணுசக்தி ஆலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது

  • மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தின் ஜய்தாபூரில் 9900 மெகாவாட் அணு உலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
  • இந்தத் திட்டம் இந்தியா மற்றும் பிரான்ஸால் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

மகாராஷ்டிரா விவசாய உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல்வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை அரசு திரும்பப் பெறுகிறது

  • மகாராஷ்டிரா அரசாங்கம் கீழவையில் அறிமுகப்படுத்திய மகாராஷ்டிரா விவசாய உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை திரும்பப் பெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு துணை சபாநாயகர் பெறும்சட்டமன்றம்

  • நவம்பர் 30ம் தேதி மகாராஷ்டிர சட்டமன்றம் நான்கு ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு துணை சபாநாயகருக்கான தேர்தல் நடத்தி தேர்வு செய்யவுள்ளது.

மராத்தாக்களுக்கான 16 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாநிறைவேற்றியது

  • மகாராஷ்டிரா சட்டமன்றம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவின்படி மராத்தாக்களுக்காக 16 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது.

மத்தியப் பிரதேசம்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
போபால் சிவராஜ் சிங் சௌஹான் ஆனந்தீ பன் படேல்

63 வது தொடக்க தின கொண்டாட்டம்

  • மத்தியப் பிரதேசம் நவம்பர் 1, 1956 இல் உருவாக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம் உருவாகி 63 ஆண்டுகள் நிறைவு பெற்ற தினத்தை கொண்டாடுகிறது.

மேகாலயா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
ஷில்லாங் கான்ராட் சங்மா தாதாகாட்டா ராய்

3 வது தேசிய ஆயுர்வேத தினம் 2018

  • 3 வது தேசிய ஆயுர்வேத தினம் – 2018, ஷில்லாங் மேகாலயாவில் அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் “Ayurveda for Public Health” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளிகள் அமைக்க திட்டம்

  • மேகாலயாவில் மூன்று வருட காலத்திற்குள் 20 கோடி ரூபாய் செலவில் 36 ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளிகளை அமைக்கத் (EMRS) திட்டம்.

இந்தியா சர்வதேச செர்ரி ப்ளாசம் விழா துவக்கம்

  • இந்தியாவின் சர்வதேச செர்ரி பிளாஸம் விழாவின் மூன்றாவது பதிப்பு 2018 ஆம் ஆண்டு போலோ 5 வது மைதானம் ஷில்லாங்கில் நடந்தது. இது பல கலாச்சார நிகழ்வுகள் கொண்ட இமாலய செர்ரி மலர்களின் தனிப்பட்ட இலையுதிர் மலர்ச்சியை கொண்டாடுகிறது.

மேற்கு வங்காளம்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
கொல்கத்தா மம்தா பென்னர்ஜி கேசரி நாத் திரிபாதி

‘ரசகுலா தினம்‘நவம்பர் 14 அன்று கொண்டாடப்படவுள்ளது

  • மாநிலத்தின் புகழ்பெற்ற இனிப்புப் பண்டமான வங்காளத்தின் ரசகுலா புவியியல் குறியீடு (ஜி.ஐ) பெற்றதன் முதல் ஆண்டின் நினைவாக, நவம்பர் 14 அன்று ‘ரசகுலா தினத்தை’ கொண்டாட மேற்கு வங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

24 வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா

  • 24 வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா (KIFF) நேதாஜி உள்ளரங்க ஸ்டேடியத்தில் தொடங்கியது. இது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படுகிறது, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து சர்வதேச விருதினை வென்ற திரைப்படங்களை திரையிடுகின்றனர்.

திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத (ODF) நிலை

  • கிராமப்புற ஜார்கண்ட் ODF என அறிவித்தனர். 2018 டிசம்பரில் மேற்கு வங்காளம் (ODF) ஆக மாறும் என்று மேற்கு வங்காளம் அறிவித்துள்ளது. மேற்கு வங்காளம் தற்போது 97% கிராமப்புற சுகாதார திட்டங்களை கொண்டுள்ளதுடன், அக்டோபர் 2019 தேசிய இலக்குக்கு முன்னரே ODF ஆக மாறுகிறது.

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook   Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!